கூந்தல் பராமரிப்புஹேர் கண்டிஷனர்

அடர்த்தியான தலை முடியை பெற

21-1371812051-2-hair-womend-600 (1)தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பேணுவார்கள். இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு.

அதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், அதிலும் ஈரப்பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இகை பார்ப்பதற்கு அழகை மெருகேற்றினாலும், ஈர முடி பல முடிப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். அதுவும் பருவக்காலத்தில் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அமிழ மழை, அழுக்கு மழை நீர் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலையால் தலை முடி மற்றும் தலை சருமமும் பாதிப்புக்குள்ளாகும்.

உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் சரி, கீழ்க்கூறிய டிப்ஸ் தலைமுடி மற்றும் தலை சருமத்தை பருவக்காலத்தில் பாதுகாப்பாக வைக்க உதவும்.
ஈரப்பதம்
தலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button