இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… ஜீரண சக்தி அதிகரிக்கும்!…

தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 2,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
புளி, வெல்லம் – சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு… கடலைப்பருப்பு, தனியா, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிடவும். இதனுடன் தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு சேர்த்து துவையலாக அரைத்தெடுக்கவும். கடுகு, பெருங்காயத்தை தாளித்து துவையலில் சேர்க்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… ஜீரண சக்தி அதிகரிக்கும்.

Leave a Reply