நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

நம்ம வீட்டிலையே இருக்க கூடிய ஒவ்வொரு உணவு பொருட்களிலும் பலவித நன்மைகள் ஒளிந்துள்ளன. ஒரு சில உணவுகளையும் அதன் பயன்களையும் நாம்நன்றாகவே அறிவோம். அந்த வகையில் இந்திய உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த பெருஞ்சீரகமும் அடங்குகிறது. இதன் பயன்கள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கும்.

பெருஞ்சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது. இந்த சின்ன சின்ன விதைகள் நமது முகப்பருக்கள் முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை அனைத்திற்கும் தீர்வை தருகிறதாம். வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

பல ஆயிர காலமாக..!

நாம் இந்த பெருஞ்சீரகத்தை இன்று நேற்று நமது உணவில் சேர்த்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் இல்லை. பல ஆயிரம் வருடமாக இந்த பெருஞ்சீரகத்தை நாம் நமது உணவிலும் மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றோம். மற்ற உணவு வகைகளை போன்றே இதற்கும் பல வரலாறு உண்டு.

முக அழுக்குகளை போக்க

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை போக்குவதற்கு இந்த பெருஞ்சீரகம் நன்றாக உதவும். இதற்காக தனியாக எந்தவித கிரீம்களையும் நீங்கள் வாங்க வேண்டியதில்லை. மாறாக இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதுமானது. இதற்கு தேவையானவை… ஓட்ஸ் 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் 1 ஸ்பூன் சூடு தண்ணீர் சிறிது

செய்முறை :-

முதலில் பெருஞ்சீரகம் மற்றும் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். இவை கூழ்மையான பதத்திற்கு வர வேண்டுமென்றால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

சுருக்கங்கள் மறைய

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய ஒரு எளிய வழி உள்ளது. 2 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து போகும்.

பருக்களை போக்க

முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தையும் முழுவதுமாக போக்குவதற்கு இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை… தேன் 1 ஸ்பூன் ஓட்ஸ் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்

செய்முறை :-

ஓட்ஸ் மற்றும் தேனை முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும்.

வெண்மையான முகத்திற்கு

முகம் பளபளவென இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். தேவையானவை… பெருஞ்சீரகம் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை…

அரை கப் நீரை கொதிக்க விட்டு அதில் இந்த பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி, வடிகட்டி கொள்ள வேண்டும். இறுதியாக இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பஞ்சால் ஒத்தடம் கொடுக்கலாம். இது முகத்தை வெண்மையாக மாற்ற உதவும்.

 

Leave a Reply