இவற்றை உட்கொள்வதன் மூலம், இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

அஸ்பாரகஸ் என்னும் உணவுப் பொருளைப் பற்றி பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். இது அனைத்து காய்கறி கடைகளிலும் கிடைக்காது. இது பார்ப்பதற்கு தண்டு போன்று இருக்கும். இதன் இளந்தளிர்கள் மக்களால் உண்ணப்படும். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதில் நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே போன்றவையும், இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவும் குரோமியம் என்னும் கனிமமும் வளமாக நிறைந்துள்ளது. இந்த உணவுப் பொருள் சூப்பர் மார்கெட்டுகளில் அதிகம் கிடைக்கும். குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் நல்லது.சரி, இப்போது அஸ்பாரகஸ் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

செரிமானம் மேம்படும்:அஸ்பாரகஸில் நல்ல வளமையான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் இருப்பதால், இவை நல்ல செரிமானத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

இதய நோய்:அஸ்பாரகஸில் உள்ள எண்ணற்ற நோயெதிர்ப்பு அழற்சி பொருளால், இவற்றை உட்கொள்வதன் மூலம், இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

எலும்புகளை வலிமையாக்கும்:வைட்டமின் ஈ என்னும் சத்து அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலிமையாக வைக்க உதவுவதுடன், இரத்த உறைவதைத் தடுக்கும்.

குடல் புற்றுநோய்:அஸ்பாரகஸில் இனுலின் என்னும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சும் பெருங்குடலை அடையும் வரை செரிமானமாகாமல் தடுப்பதோடு, குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.

இரத்த சர்க்கரை அளவு:அஸ்பாரகஸில் உள்ள மற்றொரு முக்கியமான நன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும் வைட்டமின் பி வளமாக நிறைந்துள்ளது. இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்கலாம்.

எடையைக் குறைக்கும்:அஸ்பாரகஸில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, கொழுப்புக்களும் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

பாலுணர்வைத் தூண்டும்:கடல் சிப்பி, சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களைப் போல், அஸ்பாரகஸ் சாப்பிட்டால், பாலுணர்வு தூண்டப்படுவதோடு, உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய உதவி புரியும். ஏனெனில் இதில் உள்ள ஃபோலிக் ஆசிட், ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரித்து, உச்சக்கட்ட இன்பத்தை எளிதில் பெற உதவுமாம்.

பார்வை மேம்படும்:அஸ்பாரகஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. எனவே பார்வைக் கோளாறு உள்ளவர்கள் அஸ்பாரகஸ் உட்கொள்வதன் மூலம், தங்களின் கண் பார்வையை மேம்படுத்தலாம்.

சிறுநீரக செயல்பாடு:அஸ்பாரகஸில் சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இந்த கனிமச்சத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.

சரும பாதுகாப்பு:அஸ்பாரகஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளில் ஒன்றான க்ளுட்டோதியோனைன் உள்ளது. இது சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், முதுமை தோற்றத்தை விரைவில் பெறாமல் இருக்கவும் உதவி புரியும்.

அஸ்பாரகஸ் பொரியல் சமைக்கும் முறை:அஸ்பாரகஸை நன்கு நீரில் கழுவி, பின் அதன் இளந்தளிர்களை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அடுத்து நறுக்கி வைத்துள்ள அஸ்பாரகஸை சேர்த்து பிரட்டி, தண்ணீர் சேர்க்காமல் மூடி வைத்து வேக வைத்து, சிறிது துருவிய தேங்காயை தூவி இறக்கினால், அஸ்பாரகஸ் பொரியல் ரெடி!

Leave a Reply