ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சோளநாரில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா!……

சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

சோளநாரில் உள்ள நன்மைகள்

சோளநாரில் அதிகமாக உள்ள விட்டமின் K, காயங்களினால் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்து, காயம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

solam
Person pulling back husk to reveal corn in a corn on the cob

சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இது சிறுநீரக கற்களை உருவாக்காமலும், ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
சோள நார் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்தி, அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக்க உதவுகிறது.

சோளநார் இன்சுலின் ஹார்மோனை தூண்டி, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்க செய்யாமல் தடுப்பதால், இதை சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் சோள நாரை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button