பேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி?

எளிமையான முறையில் பேப்ரிக் பெயிண்டிங் மூலம் அழகிய பூக்கள் வரைவது எப்படி?

தேவையானவை

  • துணி
  • ஃபேப்ரிக் பெயிண்ட் – வெள்ளை, டார்க் நீலம், லைட் நீலம்
  • தூரிகை (பெயின்டிங் பிரஷ்)
  • கலர் சாக் (Chalk)​ை

செய்முறை

ஒரு துணியில் சாக்கினால் பூக்கள், இலைகளின் படத்தை வரையவும்.

 

சாக்கினால் வரைந்த படத்தின் மீது தூரிகை கொண்டு பூவிதழ்களின் வெளிப்புறத்தை(out line) வெள்ளை நிறத்தால் வரையவும். பின்னர் லைட் நீல நிறத்தால் இதழின் உள்பகுதியை நிரப்பவும்.

பின்னர் பிரஷால் இதழின் வெளி ஓரத்திலிருந்து (வெள்ளை நிற கறை) நடுப்பக்கமாக உள்நோக்கி மெதுவாக இழுத்து விடவும்(soft long strokes). இப்படி இதழைச் சுற்றி செய்யவும். (இரு நிறங்களும் தனித்தனியே தெரியாமல் ஒன்றுடன் ஒன்று கலந்தமாதிரி இருக்கும்).

இதேபோல் அனைத்து இதழ்களுக்கும் செய்து, பூக்கள் அனைத்துக்கும் வர்ணம் தீட்டவும்.

பின்னர் இதே போன்று இலைகளிற்கு டார்க் நீல நிறத்தால் வர்ணம் தீட்டவும். பின்னர் லைட் நீல நிறத்தால் இலைகளின் நரம்புகளை வரையவும். பின்னர் பிரஷின் அடிப்பாகத்தை வெள்ளை வர்ணத்தில் தோய்த்து பூக்களின் நடுவே புள்ளிகளை வைக்கவும்.

இதேபோல பிரஷின் அடிப்பாகத்தால் நீல வர்ணத்தில் பெரிய பூக்களைச் சூழ சிறிய பூக்களை வரையவும். நடுவில் ஒரு புள்ளி வைத்து சுற்றி 6 புள்ளிகள் வைக்கவும்.

பின்னர் பெயிண்டின் தன்மைக்கேற்ப துணியை நிழலில் உலர்த்தவும்.(பொதுவாக 24 மணி நேரங்கள் – சிறிய பூக்களாயின் குறைந்த நேரத்திலேயே உலர்ந்து விடும்). இவை மிகவும் இலகுவாக போடக்கூடிய பூக்களாகும்.

இப்படி விரும்பிய பூக்களை விரும்பிய நிறங்களில் போடலாம். இந்த பூக்களை தலைகாணி உறை, கதிரை குஷன் உறை, திரைச்சீலை, ஆடைகள் ஆகியவற்றிற்கு போட அழகாக இருக்கும்.

Leave a Reply