32.1 C
Chennai
Sunday, May 11, 2025
hair fall solution
கூந்தல் பராமரிப்பு

முடி பாதிப்பை தடுக்க இத செய்யுங்கள்!…

இன்றைய காலகாட்டத்தில் முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை… என முடிபிரச்சினை இப்படி வரிசை கட்டி கொண்டே போகிறது. அதுவும் இன்றைய நவீன உலகில் இதன் தாக்கம் இன்னும் கூடவே உள்ளது.

அதை விட மோசமானது, கண்ட வேதி பொருட்களையெல்லாம் தலைக்கு தடவுதல் தான். இது மேலும் பாதிப்பை அதிகமாக்குமே தவிர குறைக்காது. உங்களின் முடி பிரச்சினை அனைத்திற்கும் விரைவிலே தீர்வை தர பப்பாளி உள்ளது. இதை இந்த பதிவில் கூறுவது போல பயன்படுத்தினால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.

hair fall solution

முடி பாதிப்பை தடுக்க

உங்களுக்கு ஏற்படுகின்ற முடி பாதிப்பை தடுக்க மிக எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை…

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

பப்பாளி துண்டு 5

தயாரிப்பு முறை

முதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த குறிப்பு அருமையாக உதவும்.

தேவையானவை :-

கருவேப்பிலை ஒரு கைப்பிடி

பப்பாளி 5 துண்டு

யோகர்ட் 3 ஸ்பூன்

செய்முறை :-

பப்பாளி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் யோகர்ட் கலந்து தலையின் ஒவ்வொரு பகுதியிலும் தடவவும். 20 நிமிடம் ஊற வாய்த்த பின்னர் தலையை அலசவும். முடியை சீக்கிரத்திலே வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.

வழுக்கையை போக்க

முடி உதிர்ந்து வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையான பொருட்கள்…

முட்டை 1

பப்பாளி 4 துண்டு

செய்முறை :-

முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து பப்பாளியை அரைத்து கொண்டு முட்டையுடன் நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாஸ்க்கை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி வளர ஆரம்பிக்கும்.

கருகருவென வளர

உங்களின் முடி கரு கருவென வளர இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வாருங்கள்.

தேவையானவை…

தேங்காய் பால் அரை கப்

பப்பாளி அரை கப்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் பப்பாளியை அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேங்காய் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். 20 கழித்து தலைக்கு குளிக்கலாம். முடியை கருமையாக வைத்து கொள்ள இந்த குறிப்பு உதவும்.

Related posts

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

nathan

ஆலிவ் எண்ணெய் சாம்பல் முடிக்கான பரிகாரம் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?

nathan

முடி கொட்டுவது இயல்பானதா?

nathan

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

பொடுகு தொல்லையா?

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்தி பொடுகில்லா தலை சருமத்தை நிரந்தரமாக பெறலாம்

sangika

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan