எடை குறையஆரோக்கியம்

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க இத செய்யுங்கள்!…

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.

* தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்ப்பூசணி விதைகளை அப்படியே சாப்பிட விருப்பப் படாதவர்கள் முளை கட்ட வைத்து சாப்பிடுவது நல்லது. அதில் புரத சத்தும் அடங்கியிருக்கிறது.

fat6 1

* பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.

* சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங் களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.

* சூரியகாந்தி விதைகள் ஆன்டிஆக்சிடென்ட் குணங்களைக் கொண்டுள்ளன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கீழ்வாதம், ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும். நோய் எதிப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகளை சாலட்டுகளாகவோ, தானியங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

* சரும சுருக்கங்கள் மற்றும் தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் பலாப்பழ கொட்டைகளை சாப்பிட்டு வரலாம். இவை ரத்த சோகையை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. பலாப்பழ கொட்டைகளை சமையலில் சேர்த்தோ அல்லது நீரில் வேகவைத்தோ சாப்பிடலாம்.

* ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. அவைகளை வறுத்தோ, சாலட்டுகளாக தயாரித்தோ சுவைக்கலாம். ரத்த அழுத்தத்தை சீர் செய்யவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது உதவும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button