கூந்தல் பராமரிப்பு

எங்கேயும் முடி..எதிலும் முடி..!

எங்கேயும் முடி..எதிலும் முடி..! எப்போ பார்த்தாலும் உங்களின் முடி கொட்டி கொண்டே இருக்கா..? முடி கொட்டும் பிரச்சினையே உங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துதா..? இப்படி முடியை பற்றிய எக்கசக்க கேள்விக்கும் உங்களின் பெரும்பாலான பதில் “ஆமாம்” என்பதே. இப்போதெல்லாம் மற்ற பிரச்சினைகளை காட்டிலும் முடியை பற்றிய தொல்லையே பெரும் பாடாக உள்ளது. ஒரு சிலருக்கு முடி உதிரும் அளவிற்கே முடி வளரவும் செய்யும். ஆனால், பலருக்கும் இது தலை கீழாகவே நடக்கும்.

முடி கொட்டுமே தவிர வளர செய்யாது. அந்த இடத்தில் வழுக்கை என்கிற புதிய பிரச்சினை உருவாகி இருக்கும். இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து தப்பிக்க மிக எளிதான வைத்தியம் உள்ளது. இந்த முறையை பல ஆயிரம் வருடமாக நமது முன்னோர்களே பயன்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வளவு சிறப்புமிக்க முறையை பற்றியும், முடியினால் ஏற்படுகின்ற மற்ற பிரச்சினைகளையும் எவ்வாறு குணப்படுத்துவது என்பதையும் இனி பார்ப்போம்.

hair fall2

ரொம்ப முக்கியம்..!

ஒருவரின் தோற்றத்தை மிக இயல்பாகவே அழகாக காட்ட, முடி நன்கு உதவும். முடியின் ஆரோக்கியம் என்பது நமது உடல் ஆரோக்கியத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. முடி அதிக அளவில் கொட்டினால் அது பலவித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். இனி ஆப்பிளை வைத்து எப்படி முடி பிரச்சினைகளை தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

பொடுகை போக்க தலையில் உள்ள பொடுகை முழுவதுமாக போக்குவதற்கு இந்த குறிப்பு உதவும்.

இதற்கு தேவையானவை…

ஆப்பிள் 1

ஓட்ஸ் 2 ஸ்பூன்

செய்முறை :-

ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு, அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஓட்ஸை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலைக்கு தேய்த்து 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.

முடியை பொலிவாக்க…

முடி உதிர்வை நிறுத்துவது போன்று முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்வதும் மிக முக்கியமானதாகும். இதை செய்வதற்கு இந்த குறிப்பே போதும்.

தேவையான பொருட்கள்…

ஆப்பிள் 1

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

சோள மாவு 1ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினீகர் 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் ஆப்பிளை அரிந்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை வடி கட்டிய பின் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர், சோள மாவு ஆகியவற்றை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் குளிக்கவும். இவ்வாறு 2 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முடி பொலிவு பெறும்.

மீண்டும் முடி வளர

உங்கள் வழுக்கையில் முடி வளர வைக்க இந்த குறிப்பு ஒன்றே போதும்.

இதற்கு தேவையான பொருட்கள்..

முட்டை 1

ஆப்பிள் 1

செய்முறை :-

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொண்டு நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆப்பிளை அரைத்து கொண்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.

பளபளவென மாற

உங்களின் முடி மிகவும் பளபளப்பாக இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். தேவையானவை :- தேன் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

ஆப்பிள் 1

செய்முறை :-

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொண்டு நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆப்பிளை அரைத்து கொண்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.

பளபளவென மாற

உங்களின் முடி மிகவும் பளபளப்பாக இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். தேவையானவை :-

தேன் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

ஆப்பிள் 1

செய்முறை :-

ஆப்பிளை அரிந்து கொண்டு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தென் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முடியில் தடவவும். 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி பளபளவென மின்னும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button