தேவையானப்பொருட்கள்: முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத்துண்டுகள் – தலா ஒரு கப், உலர் திராட்சை – 10. செய்முறை: முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். குறிப்பு: சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!