மருத்துவ குறிப்பு

கண்புரை என்றால் என்ன?

இன்று எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாக கட்டரக்ட் (Cataract) எனப்படும் கண்புரை நோய் மாறிவருகிறது. உலகத்தில் இந்த நோயால் நாளாந்தம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக சுகாதார அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

கண்புரை என்றால் என்ன?

கண்புரை என்பது கண் வில்லையின் ஒளி ஊடுபுகவிடும் தன்மையினைக் குறைக்கும் ஒரு செயற்பாடாகும். இது கண்வில்லைக்கு குறுக்கே புகார் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இயல்பு நிலையை இழந்த ஒருவித புரதங்களே கண்புரையினை ஏற்படுத்துகின்றன.

kan purai

கடந்த நூற்ராண்டுகளில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை குருடர்கள் என்றே அழைத்துவந்துள்ளனர். கண்புரை காலம் செல்லச் செல்ல மேலும் வலுவாகி நிரந்தரமான குருடர்களாக மாற்றவல்லது.

கண் புரையுள்ளவர்களால் நீல நிறத்தினை தெளிவாக அடையாளம் காணமுடியாது என்றும் இவர்களால் வாசிப்பு மற்றும் வாகனம் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளை இரவில் மேற்கொள்ளமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கண் புரையை இல்லாது செய்யும் சிகிச்சை முறைகள் அறிமுகமாகியபின்னர் உலகத்தில் குருடர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது.

வயது செல்லச் செல்ல ஏற்படும் இந்த நோயானது நீரிழிவு, கண்ணில் பலத்த அடி, இரத்த அழுத்தத்தின் தாக்கம் மற்றும் சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்களின் தாக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது. இதுதவிர சில வகையான மாத்திரைகளை தொடர்ச்சியாக உள்ளெடுத்தல் மற்றும் கண் நோய்கள் போன்றவற்றாலும் கண்புரை ஏற்படுகின்றது.

கண் புரைக்கு எதிராக இன்றுவரை கையாளப்படும் சிகிச்சையாக சத்திர சிகிச்சையே விளங்குகின்றது.

கண் வில்லையை நீக்கிவிட்டு செயற்கையான ஒன்றைப் பொருத்தும் நடைமுறை பரவலாக கையாளப்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சைமுறை அதிக செலவீனம் என்பதனால் பெரும்பாலான மக்கள் இந்த சிகிச்சை முறையினைப் பின்பற்றுவதிலிருந்து தவறிவிடுகின்றனர்.

ஆனாலும் தற்பொழுது சொட்டு மருந்து மூலம் (lanesterol) இந்த நோயினைக் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கணிசமானளவு வெற்றியினைக் கண்டு வருகின்றனர். அதாவது சொட்டு மருந்து மூலம் கண் புரையினைக் கரைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த சொட்டு மருந்து சிகிச்சை முறை தற்பொழுது நாய்கள் மற்றும் எலிகளுக்கே பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டுவருவதால் இன்னமும் மனிதர்களுக்கான பாவனைக்கு வரவில்லை.

ஆனாலும் கண் புரை குறித்து இனிவரும் காலத்தில் மக்கள் பயப்படவேண்டிய அவசியக் இல்லை என்றே மருத்துவ உலகம் கூறிவருகிறது. மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button