tomato1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

நம் எல்லோருக்கும் முகத்தை இளமையாக வைத்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருக்கும். இதற்காக என்னென்னமோ செய்வோம். நமது முகத்தை அழகாக மாற்ற கூடிய தன்மை நாம் வாங்கி அடுக்கி வைத்து கொள்ளும் கிரீம்களிலோ, மெக்கே பொருட்களிலோ இல்லை. மாறாக நம் வீட்டில் இருக்க ஒரு சில உணவு வகைகளிலே உள்ளது.

இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே நமது முகத்தை மிக அழகாக வைத்து கொள்ளலாம் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்த உணவுகள் எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாதாம். மேலும், உங்களின் முகத்தில் ஏற்பட கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், அரிப்புகள் போன்றவை தடுத்து நிறுத்துமாம். இவை என்ன வகையான உணவுகள் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

கேரட்

முகத்தை இளமையாக மாற்ற கூடிய தன்மை இந்த கேரட்டிற்கு உள்ளது. இதில் அதிக அளவில் உள்ள பீட்டா கேரட்டின் சருமத்தை இளமையாக வைத்து கொள்ளும். மேலும், முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்குமாம்.

வால்நட்ஸ்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த வால்நட்ஸில் அதிக அளவில் உள்ளது. இதனை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவாக மாறும். அத்துடன் மிகவும் இளமையான சருமத்தையும் இது உண்டாக்கும்.

tomato1

தக்காளி

முகத்தை எளிமையாக பராமரிக்க தக்காளி ஒன்றே போதும். தக்காளியை நேரடியாக முகத்தில் தடவினாலோ உணவில் சேர்த்து உண்டாலோ இதன் பயன் அப்படியே உங்களுக்கு கிடைக்கும். சூரியனின் புற ஊதா கதிர்களிடன் இருந்தும் உங்களை இது காக்கும்.

ஆரஞ்சு

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் இந்த தக்காளியில் உள்ளதால் நமது உடலுக்கும் முகத்திற்கும் அதிக ஆரோக்கியத்தை தர கூடும். மேலும், முகத்தை வெண்மையாக மாற்ற கூடிய தன்மையும் இந்த ஆரஞ்சு பழத்திற்கு உள்ளதாம்.

முட்டை

புரதசத்து முட்டையில் அதிகம் இருப்பதால் முகத்தின் அழகை பராமரிக்க இது உதவும். இவை collagen என்கிற மூல பொருளை உற்பத்தி செய்வதால் சருமத்தை இளமையாக வைத்து கொள்ளும். மேலும் சருமத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளையும் இது தடுக்கும்.

கிரீன் டீ

தினமும் காலையில் வெறும் டீ அல்லது காபிக்கு பதில் கிரீன் டீ குடித்து வந்தாலே உங்கள் உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அவற்றில் முகத்திற்கான நன்மைகளும் அடங்கும். முக பருக்கள், முகத்தில் ஏற்பட கூடிய வீக்கம் போன்றவற்றை இது தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தர்பூசணி

அதிக நீர்சத்து கொண்ட உணவுகளில் தர்பூசணி முதன்மையான இடத்தில் உள்ளது. கண் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அதனை எளிதில் குறைக்க ஆற்றல் இக பழத்திற்கு உள்ளது. மேலும், முகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்களையும் இது குறைத்து விடும்.

மாதுளை

இந்த பழத்திற்கென்று ஏராளமான தனித்துவங்கள் உண்டு. இது உடல் நலத்திற்கும் முக அழகிற்கும் அதிக அளவில் உதவும். தினமும் 1 மாதுளை சாப்பிட்டு வந்தால் சருமம் மின்னும் அழகை பெறும். முகத்தில் உண்டாக கூடிய சரும பாதிப்புகளையும் இந்த மாதுளை தடுத்து நிறுத்தும்.

 

Related posts

சரும பிரச்சனைகளை தீர்க்க

nathan

மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் திரும்பினார் -கால்விரல்கள் அகற்றப்பட்டவரின் தற்போதைய நிலை

nathan

ஃபேர்னஸ் க்ரீம் போடுவது சருமத்திற்கு நல்லதா?

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

சுவையான மிளகாய் சப்ஜி

nathan

குளிர்கால குறிப்புகள்

nathan