29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
fat1
எடை குறையஆரோக்கியம்

உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான்!

எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பெருமபாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினயாகும். அதற்கு காரணம் நமது வாழ்க்கை முறையும், நாம் பின்பற்றும் மோசமான உணவுமுறையும்தான். எடையை குறைப்பதற்கு நாம் செய்யும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிய காரணம் அந்த முறைகள் பற்றி நமக்கு முழுமையான தெளிவு இல்லாததுதான்.

எடை அதிகரிக்க எப்படி உணவுகள் காரணமாக இருக்கிறதோ அதேபோல எடையை குறைக்கவும் உணவையே பயன்படுத்தலாம். ஆனால் என்ன உணவை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக காலை நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சில ஆரோக்கியமான உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது கூட உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும். இந்த பதிவில் காலை நேரத்தில் குடிக்கக்கூடாது பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

fat1

இனிப்பு லஸ்ஸி

தயிர், சர்க்கரை மற்றும் நீர் கலந்த கலவையை காலை நேரத்தில் குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள் இந்த பழக்கத்தை அதிகம் கொண்டுள்ளார்கள். இதில் அதிகமாக உள்ள கொழுப்பும், சர்க்கரையும் உங்கள் உடல் எடையை விரைவில் அதிகரித்துவிடும். ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் உள்ளது.

சுவையூட்டப்பட்ட பால்

காலை நேரத்தில் காபி, டீ-க்கு பதிலாக செயற்கை சுவை சேர்க்கப்பட்ட பாலை குடிப்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சாக்லேட் மற்றும் பாதாம் சுவை கொண்ட பாலை குடிப்பதை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு டம்ளர் சுவையூட்டப்பட்ட பாலில் 165 கலோரிகள் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பழங்களை ஜூஸாக குடிப்பதை காட்டிலும் பழமாக சாப்பிடுவதே சிறந்தது என்று கூறுகிறார்கள். ஏனெனில் ஜுஸ் தயாரிக்கப்படும்போது அது நிறைய ஊட்டச்சத்துக்களை இழந்துவிடுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் பெரிதாக இருக்காது. இதில் இருப்பதெல்லாம் சிறிதளவு வைட்டமின் சி-யும், 220 கலோரிகளும்தான்.

எருமைப்பால்

உங்களுக்கு தெரியுமா ஒரு கிளாஸ் எருமைப்பாலில் 280 கலோரிகள் உள்ளது, மேலும் 16.81 கிராம் கொழுப்பும் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய இந்த தகவலே போதும். காலை நேரத்தில் எருமைப்பால் குடிப்பதை தவிர்ப்பதுதான் உடல் எடைக்கு நல்லது.

வாழைப்பழ மில்க்சேக்

உங்களுக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒரு வாழைப்பழத்தில் மட்டுமே 108 கலோரிகள் உள்ளது எனில் அதனுடன் பால் இணையும்போது அவற்றின் கலோரிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான்.

ஸ்மூத்தீஸ்

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தீகளை குடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இதில் உள்ள கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் எவ்வளவு கலோரிகளை அதிகரிக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. அதிகமாக ஸ்மூத்தீ குடிப்பவர்களின் எடை மற்றவர்களை விட வேகமாக உயரும்.

குடிக்க வேண்டியவை

பெரும்பாலும் பாலில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்ப்பதே எடை குறிப்பிற்கு நல்லது. எடை குறைக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் காலை நேரத்தில் சுடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம். எடை குறைப்பிற்கு இதை விட எளிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இதை விரும்பாதவர்கள் எலுமிச்சை சாறில் தேன் கலந்தோ அல்லது சுடுநீரில் எலுமிச்சைச்சாறும், தேனும் கலந்து குடிக்கலாம்.

Related posts

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

nathan

உடல் எடை… பெண்களே கவனம்…

nathan

இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும் கொடூரமான நோய்கள்

sangika

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு

sangika

காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

பேரிச்சம் பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

nathan

அத்திப்பழம் உடலுக்கு சிறந்த மருந்தாக திகழ்வது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!…

sangika