ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால்!….

மருத்துவ செய்திகள்:பெரும்பாலானவர்கள் இப்போது நினைவாற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். அலுவலக பணிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் தேவையற்ற மனஅழுத்தத்தி்ற்கும் உள்ளாகுவார்கள். நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால், மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.

brin power

பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம்.

அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button