26.7 C
Chennai
Saturday, Feb 8, 2025
apple1
தொப்பை குறையஆரோக்கியம்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க இவற்றை செய்யுங்கள்!…

பொதுமருத்துவம்:பூண்டு:

5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.

ஆப்பிள்:

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.

apple1

கொள்ளு:

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

மிளகு:

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

சீரகம்:

ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

இஞ்சி:

ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.

Related posts

வாரம் ஒருநாள் டயட்டால் இத்தனை நன்மைகளா????

sangika

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

sangika

தினமும் தவறமல் செய்து வந்தால் நம் உடலின் பின்புற சதைகள் எளிதில் குறைந்து விடும்.

nathan

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

எந்தெந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

nathan

நம்முடைய பயணம் ஆறாத வலியையும், வடுவையும் தராது இருக்க கட்டாயம் இத படிங்க!….

sangika

தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan