ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

வெந்தயம்

வெந்தயம் இயற்கையாகவே குடல்வால் அழற்சியை தடுக்கக்கூடிய குணம் கொண்டதாகும். அடிப்படையில் வெந்தயமானது குடல் பகுதியில் சளி மற்றும் சீழ் சேருவதை தடுக்கிறது, இதன்மூலம் அந்த பகுதியில் வலி ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடிக்கவும். இது உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் பிரச்சினைகள் இருந்தால் அதனையும் குணப்படுத்தும்.

almondoil

பாதாம் எண்ணெய்

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த பாதாம் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். அடிவயிற்றிலும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் சூடான தண்ணீரில் துண்டை நனைத்து அந்த துண்டை கொண்டு சுத்தம் செய்யவும். பின்னர் பாதாம் எண்ணெயை கொண்டு பதிக்கப்பட்ட இடத்திற்கு மசாஜ் செய்யவும். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்வரை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஜின்செங்

குடல்வால் அழற்சி நோயை குணப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த மூலிகை இந்த ஜின்செங் ஆகும். இதற்கு குணசிங்கி என்ற ஒரு பெயரும் உள்ளது. இந்த பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் இரண்டு கப் ஜின்செங் டீ குடிக்க வேண்டும். இந்த பிரச்சினை இருந்தாலும் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜுஸ்களான கேரட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் போன்றவை குடல்வால் அழற்சியால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கும் தன்மை கொண்டவை. இந்த நோயிலிருந்து தப்பிக்கவும், இதனால் ஏற்படும் வழியை குறைக்கவும் இந்த பழச்சாறுகளை தினமும் இரண்டு முறை குடிக்கவும். இந்த பழச்சாறுகள் மட்டுமிநரி முள்ளங்கி பழச்சாறு, கொத்தமல்லி சாறு போன்றவற்றையும் வலியை குறைக்க பயன்படுத்தலாம்.

புதினா

இயற்கை மூலிகையான புதினா குடல்வால் பிரச்சினையை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது குடல்வால் பிரச்சினையின் அறிகுறிகளான குமட்டல், வாயுக்கோளாறு, வாந்தி போன்ற அதன் ஆரம்ப நிலைகளிலேயே குணப்படுத்தக்கூடியது. புதினாவில் டீ தயாரித்தோ அல்லது பச்சையாக சாப்பிட்டோ குடல்வால் அழற்சி ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

அறிகுறிகள்

குடல்வால் அழற்சி பிரச்சினை உங்களுக்கு இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். தொப்புள் பகுதியை சுற்றி வலி, வயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வீக்கம், பசியின்மை போன்றவை குடல்வால் அழற்சி நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தவும்.

காரணங்கள்

குடல் பகுதியில் வீக்கம் ஏற்பட பொதுவான காரணம் கிருமிகளின் தொற்றாகும். இந்த குடல்வாலின் ஒரு முனை திறந்திருக்கும், மற்றொரு முனை பெருங்குடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறிய குடல்வாயில் வீக்கம் ஏற்படும்போதோ அல்லது அதிகளவு பிணைப்பில் பிரச்சினை ஏற்படும்போதோ இந்த பிரச்சினை ஏற்படலாம். குடல் பகுதியில் உள்ள நிணநீர் முனையங்களில் வீக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். இவை தவிர காய்கறி மற்றும் பழங்களின் விதைகள், வயிறு புழுக்கள் மற்றும் X- Rays கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button