பெண்கள் மருத்துவம்

பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன!

பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஆகும். உடலின் பல்வே று பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான் உடல் எப்போது, எப்படி வளரவேண்டு ம் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.

இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும்.

இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன.

pregnet3

பருவமடைந்தபிறகு மாதவிலக்கு நிற்கும்வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.

இந்த ஹார் மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டை யை வெளியிடுகின்றன.

ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பலமாற்றங்களை உண்டாக்குகின்றன.

இந்த ஹார்மோன் களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.

ஒரு பெண், இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும்போது இந்த இரு ஹார் மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளி யிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும்.

மாத விலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.

இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற் றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும்.

இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சனை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button