அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

முக பருக்கள்- பலரின் எதிரியாகவும் வெறுக்கத்தக்க ஒரு விஷயமாகவும் மாறி உள்ளவை. நமது முகத்தில் ஒரு சின்ன கட்டி வந்தால் கூட நம்மால் பொறுத்து கொள்ளவே இயலாது. அந்த வகையில் நம் முகத்தின் முழு இடத்தையும் இந்த பருக்கள் ஆக்கிரமித்து கொண்டால் எப்படி இருக்கும். இதே நிலை தான் நம்மில் பலருக்கும் நடந்து வருகிறது.

back pimple

முகத்தில் பருக்கள் உருவாவதை விட அவை வெடித்து வெளியில் வரும்போது பல பருக்களை உண்டாக்கும். இது தான் இருப்பதிலே மிக மோசமான விஷயம். இப்படி பருகளுக்கென்றும் ஒரு வரையறை உள்ளதாம். நம் உடலில் முகத்தை தவிர பல இடங்களிலும் பருக்கள் உண்டாகும் அவை ஒவ்வொன்றிற்கும் என்ன அர்த்தம் என்பதையும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தாடைக்கு கீழ்

நம் முகத்தில் தாடைக்கு கீழ் பகுதியில் பருக்கள் உருவாகினால் அவை ஹார்மோன் சீராக உற்பத்தி ஆகவில்லை என்பதை குறிக்கிறதாம். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்பட்டால் இது போன்று உண்டாகுமாம்.

உட்காரும் இடத்தில்

பலரும் பின்பகுதியில் இந்த பருக்கள் உண்டாக கூடும். இது கொஞ்சம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடியது தான், என்றாலும் இது ஏற்படுவதற்கான காரணியும் உண்டாம். அதாவது, ஹார்மோன் குறைபாடு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றிற்கு நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரை தான் இந்த பின்புற பருவிற்கு காரணமாம்.

மார்பு பகுதியில்

மார்பக பகுதியில் சிறிய கட்டி உண்டாகினாலே அதை புற்றுநோய் கட்டி என பலர் நினைத்து விடுகின்றனர். ஆனால், இது அப்படி இல்லை. மார்பக பகுதியில் பரு போன்று இருந்தால் அதை கண்டு பயம் கொள்ள வேண்டியதில்லை. இது பெரும்பாலும் பதின் பருவத்தில் உள்ளோருக்கே வர கூடும்.

நெற்றியில்

நெற்றி பகுதியில் பருக்கள் ஏற்பட்டால் அப்பட்டமாக தெரியும். இந்த வகை பருக்கள் மன அழுத்தத்தின் காரணமாகவே உருவாகின்றன. மேலும், இதனை உருவாக்க கார்டிசோல் ஹார்மோன் தான் காரணமாகவும் உள்ளது.

முதுகு பகுதியில்

முதுகுக்கு பின்னால் பருக்கள் வந்தால் அது உடல்நல குறைபாட்டை குறிக்கிறது. முக்கியமாக செரிமான மண்டலத்தில் ஏதேனும் பாதிப்போ, கோளாறோ இருந்தால் இது போன்று ஏற்படும். மேலும், எப்போதுமே ஜங்க் வகை உணவுகளை சாப்பிட்டாலும் இது போன்று உருவாகும்.

தொடையில்

தொடையில் உங்களுக்கு பருக்கள் உருவாகினால், அது உங்களை நெருடி கொண்டே இருக்கும். இதற்கு காரணம் உங்களின் தொடையில் உள்ள முடிகளை நீங்கள் அகற்றும் போது ஏற்பட்ட தொற்றுகளினால் தான்.

பிறப்புறுப்புகளில்

உள்ளாடை அணியும் இடத்தில் பருக்கள் உண்டாகினால் சற்று மோசமான ஒன்று தான். இது ஏற்பட காரணம், அதிக வியர்வை, இறுக்கமான உடை அணிதல், அதிக அளவில் எண்ணெய் சுரத்தல் முதலியவற்றால் தான். இது பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சலை உண்டாக்கி, காயமாக மாற கூடும்

காரணம்

உடலில் உருவாக கூடிய ஒவ்வொரு வகை பருக்களுக்கு ஒரு காரணம் இருக்கின்றன. எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரந்தால், மன அழுத்தம் கூடினால், சரியான உணவுகள் இல்லையென்றால், சருமத்தை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றால்…இப்படிபட்ட காரணிகள் தான் பருக்கள் உண்டாகுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button