சரும பராமரிப்புஅழகு குறிப்புகள்முகப் பராமரிப்புமுகப்பரு

ரோசாசியா என்றால் என்ன?

தேசிய ரோசாசியா சமூகத்தின் கணக்கீட்டின் படி, உலகம் முழுவதும் 415 மில்லியன் மக்கள் ரோசாசியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோசாசியா பாதிப்பிற்கு தகுந்தசிகிச்சை அளிக்காத பட்சத்தில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகி, சருமத்தில் நிரந்தர சேதம் உண்டாகும் வாய்ப்பும் ஏற்படலாம்.

ஆகவே, இத்தகைய சரும நிலையை அதன் அறிகுறிகள் தொடங்கியவுடன் நிர்வகிப்பது மிகவும் அவசியம். இந்த பதிவில் இத்தகைய ரோசாசியா பாதிப்பின் அறிகுறிகளை இயற்கையான முறையில் போக்குவதற்கான அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்து படித்து, ரோசாசியா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறைகளை இப்போது கற்றுக் கொள்ளுங்கள்.

rosasiya

ரோசாசியா என்றால் என்ன?

ரோசாசியா என்பது நாட்பட்ட அழற்சியைக் கொண்ட ஒரு சரும பாதிப்பாகும். பொதுவாக இந்த பாதிப்பு முகத்தில் உண்டாகிறது, குறிப்பாக, வெண்மை நிற சருமத்தில் மிக அதிகமாக இந்த பாதிப்பு உண்டாகிறது. ரோசாசியா பாதிப்பு உண்டான பலரும், இதனை கட்டிகள், பருக்கள், எக்சிமா அல்லது வேறு எதாவது சரும ஒவ்வாமை என்று நினைத்து குழம்பி, இதனால் சிகிச்சை தாமதம் அடைகிறது. நீண்ட நாட்கள் சிகிச்சை அளிக்காமல் இருந்தால், ரோசாசியா பாதிப்பு மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எந்த வயதிலும் ரோசாசியா சருமத்தை பாதிக்கலாம் என்றாலும், குறிப்பாக நடுத்தர வயதினரை அதிலும் குறிப்பாக வெண்மை நிற சருமம் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

அறிகுறிகள்

ரோசாசியாவின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று உங்கள் கன்னங்கள் மற்றும் சில நேரங்களில் உங்கள் தாடை, மூக்கு மற்றும் நெற்றி சிவப்பு நிறமாக மாறும். அரிதான சந்தர்ப்பங்களில், உங்கள் மார்பு, கழுத்து, காதுகள் அல்லது தலை சிவப்பாக மாறும்.

இதர அறிகுறிகள்

1. உங்கள் சருமத்தில் உடைந்த இரத்த நாளங்களின் தோற்றம்

2. உடைந்த இரத்த நாளங்கள் தடிப்பாக அல்லது வீக்கமாக காணப்படலாம்.

3. உங்கள் கண்கள் சிவந்து போவது, வீங்குவது அல்லது கண்களில் வலி ஏற்படலாம்.

4. உங்கள் சருமத்தில் ஒரு வித எரிச்சலை நீங்கள் உணரலாம்.

5. சருமத்தின் சில பகுதிகள் வறண்டு கடினமாக மாறலாம்.

6. சரும துளைகள் பெரிதாகலாம்.

7. உங்கள் கண் இமைகளை சுற்றி சிறு கட்டிகள் உண்டாகலாம்

மேலே கூறப்பட்ட அறிகுறிகள் மிதமானது வரை தீவிராமகவும் ஏற்படலாம். சில சமயம் விட்டு விட்டு இந்த அறிகுறிகள் தென்படலாம். இருப்பினும், ரோசாசியாவிற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால் இந்த அறிகுறிகள் நிரந்தரமாக உடலில் தங்கி விடலாம்.

மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ரோசாசியா ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலை ஏற்பட பின்வரும் காரணிகள் முக்கிய பங்காற்றுவதாக நம்பப்படுகிறது.

அபாய விளைவுகள்

1. மரபணு – குடும்ப பாரமபரியம் இந்த நிலைக்கு ஒரு காரணமாகும்.

2. இரத்த குழாயில் உள்ள பிரச்சனைகள் சூரிய சேதத்தால் மோசமடைவதும் ஒரு காரணம்.

3. பூச்சிகள் – நமது முகத்தில் சில பூச்சிகள் வசிக்கின்றன. சிலருக்கு இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் ஒரு வித எரிச்சலை அவை உண்டாக்குகின்றன.

4. பக்டீரியா – உங்கள் குடலில் எச்.பைலோரி என்னும் பக்டீரியா வகை வாழ்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் இந்த பக்டீரியா, கஸ்டரின் என்னும் செரிமான ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது . இந்த ஹார்மோன் அதிகரிப்பால் உங்கள் சருமம் சிவந்து போகலாம்.

காரணிகள்

1. வெண்மை அல்லது சிவப்பு நிற சருமம், மென்மையான கண்கள் மற்றும் தலை முடி இருப்பது.

2. வயது – 30 முதல் 50 வயதைக் கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருந்தாலும், மற்ற வயதினரும் இந்த நிலையால் பாதிக்கப்படலாம்.

3. பாலினம் – ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.

4. முகப்பருவால் ஏற்பட்ட புண்

5. புகையிலை பயன்பாடு

6. நியாசின், ஸ்டீராய்டு அதிகமான அன்டாசிட் அல்லது அன்டி பயோடிக் போன்ற மருந்துகளின் பயன்பாடு.

ஒவ்வொரு அறிகுறியும் வெளிபடுத்தும் தன்மைக்கு ஏற்ப, ரோசாசியா நான்கு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது.

ரோசாசியா பாதிப்பை முற்றிலும் போக்க எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. ஆனால் அதன் அறிகுறிகளை ஓரளவு நிர்வகிக்க இந்த சிகிச்சைகள் உதவுகின்றன.

ரோசாசியாவை நிர்வகிக்க சில இயற்கை வீட்டுத் தீர்வுகள் உதவுகின்றன. இயற்கையான முறையில் ரோசாசியாவை நிர்வகிக்க எண்ணுபவர்கள் இந்த தீர்வுகளை முயற்சிக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

தேவையான பொருட்கள்

1-2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்

1 கிளாஸ் வெதுவெதுப்பான நீர்

தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலந்த பின் அந்த நீரைப் பருகவும்

இந்த நீரின் சுவையை அதிகரிக்க தேவைபட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் ஒருமுறை உணவிற்கு முன் இதனைப் பருகலாம்.

ஆப்பிள் சிடர் வினிகரில் சக்தி மிகுந்த அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதை நாம் அறிவோம். ரோசாசியா போன்ற அழற்சி நிலைகளை நிர்வகிக்க இந்த ஆப்பிள் சிடர் வினிகர் சிறந்த பலன் அளிக்கிறது.

மஞ்சள்

தேவையான பொருட்கள்

250-500 மிகி மஞ்சள் மாத்திரை (குர்குமின்)

செய்முறை

1. தினமும் ஒரு மஞ்சள் மாத்திரை 250-500 மிகி அளவு எடுத்துக் கொள்ளலாம்.

2. அல்லது, ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அந்த நீரைப் பருகலாம்.

3. மஞ்சள் மற்றும் யோகர்ட் சேர்த்து கலந்த ஒரு பேஸ்டை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக, தினமும் ஒரு முறை மஞ்சளை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் மாத்திரை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மஞ்சளில் ஒரு குர்குமின், மிகப்பெரிய அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு கூறு மஞ்சளை உடலில் தடவினாலும், உள்ளுக்குள் பருகினாலும் அழற்சியை தடுக்க சிறப்பான முறையில் உதவுகிறது.

இஞ்சி

தேவையான பொருட்கள்

1-2 இன்ச் இஞ்சி

ஒரு கப் தண்ணீர்

செய்முறை

1. ஒரு கப் தண்ணீரில் இஞ்சி துண்டை சேர்க்கவும்.

2. அந்த நீரை நன்றாக கொதிக்க விடவும்.

3. சில நிமிடங்கள் சிம்மில் வைத்து பின் வடிகட்டவும்.

4. ஆறியபின், இந்த இஞ்சி நீரைப் பருகவும்

ஒரு நாளில் 2 அல்லது 3 முறை இதனைப் பருகலாம்.

இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் செயல்திறன் மிக்க கூறு உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மைக் காரணமாக, ரோசாசியாவால் தோன்றும் வீக்கம், அழற்சி மற்றும் சிவப்பு நிறம் ஆகியவை குணமாகிறது.

கற்றாழை ஜெல்

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் (தேவைக்கேற்ப)

செய்முறை

1. மென்மையான க்ளென்சர் கொண்டு உங்கள் முகத்தைக் கழுவவும்.

2. கற்றாழை ஜெல் எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும்.

3. 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்பு தண்ணீரால் கழுவவும்.

ஒரு நாளில் இரண்டு முறை கற்றாழை ஜெல்லை உங்கள் முகத்தில் தடவலாம்.

கற்றாழையில் உள்ள நன்மை புரியும் கலவையால், இது ஒரு அற்புதமான அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் தன்மைகளைக் கொண்டுள்ளது. அதனால் ரோசாசியா பாதிப்பிற்கான அறிகுறியைப் போக்குவதில் சிறந்த பலன் தருகிறது.

தேன்

தேவையான பொருட்கள்

தேன் (தேவைக்கேற்ப)

செய்முறை

1. சிறிதளவு தேன் எடுத்து உங்கள் முகத்தில் முழுவதும் தடவவும்.

2. குறைந்தது அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு முகத்தைக் கழுவவும்.

சிறந்த தீர்வுகளுக்கு தினமும் இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

சரும பிரச்சனைகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிறந்த சிகிச்சை அளிக்க உதவும் ஒரு மருந்து தேன். தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் ஆகியவை ரோசாசியா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மரவள்ளிக் கிழங்கு வேர்

தேவையான பொருட்கள்

1-2 ஸ்பூன் மரவள்ளிக் கிழங்கு வேர்

2 கப் தண்ணீர்

செய்முறை

1. ஒரு கப் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மரவள்ளிக் கிழங்கு வேர் சேர்க்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் இந்த நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

3. 5-10 நிமிடங்கள் சிம்மில் வைத்து பின்பு வடிகட்டவும்.

4. ஆறியபின் இந்த நீரைப் பருகவும்.

இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வுகளைக் காணலாம்.

மரவள்ளிக் கிழங்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, உடலில் உள்ள வீக்கம் குறைய உதவுகிறது.

செவ்வந்தி பூ

தேவையான பொருட்கள்

1-2 ஸ்பூன் செவ்வந்தி பூ

டீ ஒரு கப் தண்ணீர்

செய்முறை

1. ஒரு கப் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் செவ்வந்தி பூ டீயை சேர்க்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் இந்த நீரை ஊற்றி கொதிக்க விடவும்.

3. சில நிமிடங்கள் நன்றாக கொதித்தவுடன் சிம்மில் வைக்கவும்.

4. பின்பு அந்த தேநீரை வடிகட்டி ஆற விடவும்.

5. ஆறியபின் இந்த நீரைப் பருகவும்.

6. செவ்வந்தி பூ தேநீரை டோனர் போல் பயன்படுத்தலாம் அலல்து ஒத்தடம் கொடுக்கவும் பயன்படுத்தலாம்.

செவ்வந்தி பூ தேநீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகலாம்.

மருத்துவ தன்மைக் கொண்ட ஒரு மூலிகை இந்த செவ்வந்தி பூ. இதில் சக்தி மிகுந்த எண்ணெய் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை ரோசாசியா அறிகுறிகளைப் போக்க பெரிதும் உதவுகின்றன.

மூக்குத்திப் பூ (Comfrey)

தேவையான பொருட்கள்

மூக்குத்திப் பூ எண்ணெய் அல்லது மூக்குத்தி பூ சேர்க்கப்பட்ட க்ரீம்

செய்முறை

1. உங்கள் முகத்தை மென்மையான க்ளென்சர் கொண்டு கழுவவும்.

2. முகத்தில் உள்ள ஈரத்தைத் துடைத்து விட்டு, மூக்குத்திப் பூ எண்ணெய் அல்லது க்ரீமை முகத்தில் தடவவும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.

மூக்குத்திப் பூவில் அல்லன்டோனின் மற்றும் ரோஸ்மாரினிக் அமிலம் போன்ற கூறுகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குணமளிக்கும் பண்புகள் கொண்டுள்ளதால் அழற்சி பாதிக்கபட்ட மற்றும் வீக்கம் நிறைந்த சருமத்தை குணப்படுத்த உதவுகின்றன.

க்ரீன் டீ

தேவையான பொருட்கள்

ஒரு ஸ்பூன் க்ரீன் டீ

ஒரு கப் தண்ணீர் பஞ்சு

செய்முறை

1. கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் க்ரீன் டீ சேர்க்கவும்.

2. 5-7 நிமிடங்கள் கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டவும்.

3. பிறகு ஒரு மணி நேரம் அந்த க்ரீன் டீயை பிரிட்ஜில் வைக்கவும்.

4. ஒரு மணி நேரம் கழித்து அந்த தேநீரில் பஞ்சை நனைத்து உங்கள் முகம் முழுவதும் தடவவும்.

5. அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவவும்.

ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

க்ரீன் டீயில் இருக்கும் பாலி பினால் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால் இது அழற்சி, வீக்கம், சிவப்பு நிறம் ஆகியவற்றைப் போக்கி சருமத்தைப் பாதுகாக்கிறது.

ஓட்ஸ்

தேவையான பொருட்கள்

1/2 கப் அரைத்த ஓட்ஸ்

1/4 கப் தண்ணீர்

செய்முறை

1. அரை கப் ஓட்ஸ் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு கப் தண்ணீருடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3. இந்த ஓட்ஸ் கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

4. 20-30 நிமிடங்கள் ஊறிய பின் முகத்தைக் கழுவவும்.

எத்தனை முறை இதனைச் செய்ய வேண்டும்?

ஓட்ஸ் கொண்டு தயாரிக்கும் இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு போடலாம்.

ஒட்ஸில் அவேனந்த்ரமைடு என்னும் பீனாலிக் கூறுகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் அரிப்பு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த செயல்பாடுகள் ரோசாசியாவால் உண்டாகும் அழற்சி, வீக்கம், எரிச்சல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

மேலே கூறிய இந்த தீர்வுகளுடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவை இணைத்துக் கொள்வதால், ரோசாசியா அறிகுறிகள் விரைந்து குணமாக எளிதில் உதவுகின்றன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button