அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிட!…

கருவலையம் என்பது வெறும் சருமப் பிரச்னை என்று கடந்துவிட முடியாது. அது நம் உடல்நலக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னை. தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மனஅழுத்தம் , அலைச்சல் போன்ற காரணங்களால் கருவலையம் ஏற்படும். இருப்பினும் முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிடலாம். ஆனாலும் வாழ்க்கை முறையை மாற்றி உடல் ஆரோக்கியத்தாலும் கருவலையத்தை நீக்க வேண்டியது அவசியம்.

உருளைக்கிழங்கு சாறு: இது மிகவும் எளிமையான குறிப்புதான். உருளைக் கிழங்கு சாறு எடுத்துக்கொண்டு கண்களைச் சுற்றிலும் பஞ்சால் ஒத்தடம் தர வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வாருங்கள். கருவலையம் நீங்கும்.

karuvalaijam1

தக்காளி சாறு: தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து பருத்தித் துணியில் நனைத்து கண்களைச் சுற்றி தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை தினம் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ பை: க்ரீன் டீ பையை தண்ணீரில் நனைத்து இரு கண்களிலும் அப்படியே வைத்து 10 நிமிடங்கள் அமரவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கண்களைச் சுற்றிலும் கருமை நீங்கிவிடும்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு பழச் சாறை கண்களை மூடி ஒத்தடம் தாருங்கள். பின் ஆரஞ்சு பழ சாறில் முக்கி எடுத்த பருத்தித் துணியை கண்களில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். கருவலையம் பறந்து போகும்.

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை பலரும் குளிர்ச்சிக்காக கண்களில் வைத்திருக்கக் கூடும். பெரும்பாலும் பார்லர்களில் ஃபேஷியலுக்கு வெள்ளரிதான் பயன்படுத்துவார்கள். இது குளிர்ச்சிக்கு மட்டுமல்ல. கண்களின் கருவலையத்தையும் போக்கும். வெள்ளரியின் சாறு பிழிந்து அதை பருத்தித் துணியால் நனைத்து ஒத்தடம் கொடுங்கள். பின் வெள்ளரி ஸ்லைசை கண்களில் 5 நிமிடங்கள் வைத்துக் ஒய்வெடுங்கள்.

கற்றாழை சாறு : கற்றாழை அழகு குறிப்பில் எப்போதும் இடம் பெறும். அந்த வகையில் கற்றாழை கருவலையத்தையும் நீக்கி கண்களுக்குக் குளிர்ச்சி தரும். கற்றாழை சாறு எடுத்து அதை பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றித் தடவவும். இதை தினமும் செய்து வந்தால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button