34.9 C
Chennai
Sunday, May 11, 2025
banana
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்!…

வாழைப்பழம்

எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது.

காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.

banana

திராட்சை

பழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும்.

குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.

ஆரஞ்சும் ஆப்பிளும்

பல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும்.

இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூலிகைகள்

சில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகை தன்மையை இழக்க செய்து விடும். உதாரணத்திற்கு துளசி, தூதுவளை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நாம் அப்படியே வைப்பது நல்லதல்ல.

இதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் கலந்த ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாது.

வெள்ளரிக்காய்

வீடுகளில் தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற உணவுகளில் எத்திலீன் என்கிற வாயு உற்பத்தியாகும். ஆதலால், இவை மிக விரைவிலே கெட்டு போய் விடும்.

அந்த வகையில் வெள்ளரிக்காயும் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைக்காதீர்கள். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.

ஆப்பிள்

பெரும்பாலும் ஆப்பிளை தனியான இடத்திலே வைக்க வேண்டும். பூசணி போன்றவற்றை இதன் பக்கத்தில் கூட வைக்க கூடாதாம். ஏனெனில், இவ்வாறு செய்வதால் ஆப்பிள் அதன் தட்பவெப்பத்தை மீறி சீக்கிரமே கெட்டு போய் விடுமாம்.

வெங்காயமும் உருளையும்

பொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணிற்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள்.

ஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.

வேறென்ன வைக்கலாம்..?

வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும், எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.

தக்காளி

எப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம்.

இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.

முட்டை

முட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சி

Related posts

சூப்பரான … வெஜ் பர்கர்

nathan

தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா?

nathan

தினமும் உணவில் பெருங்காயம் சேர்த்துக்கோங்க

nathan

கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

ப்ளூ டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க!

sangika