ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வாரம் ஒருநாள் டயட்டால் இத்தனை நன்மைகளா????

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

நமது முன்னோர்கள் அந்த காலத்தில் இயற்கை உணவுகளை மட்டுமே உட்கொண்டு 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

அந்தவகையில் நாமும் நோயின்றி 100 வயது வாழ இயற்கை உணவுகளை மட்டும் உட்கொண்டால் போதும் என்று சொல்லப்படுகின்றது.

வார இறுதியில் ஒரு நாளில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் டயட்டை பின்தொடர்ந்தால் உங்கள் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகவும். ஜீரண சக்தியை தூண்டும்படியும் வைத்துக் கொள்ளலாம்.

இதனால் நமது உடலி ஆரோக்கியம் பலப்படும். தற்போது இந்த டயட்டினை எப்படி பின்பற்றுவது என்பதனை பார்ப்போம்.

lemon

அதிகாலை : ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள்.

காலை சிற்றுண்டி : காலை உணவு மிக முக்கியமானது. தவிர்க்காதீர்கள். ஓட்ஸ் கஞ்சியில் வாழைப் பழ துண்டுகள் மற்றும் பாதாம் கலந்து சாப்பிடுங்கள். அல்லது ஓட்ஸ் இட்லி மற்றும் மோர் குழம்பு.

முன்பகல் : 1 கப் இளநீர், சில பப்பாளி துண்டுகள்,

மதியம் : பிரவுன் அரிசியில் சமைத்த சாதம், பாசிப் பருப்பு துவையல்.

பின்பகல் : ஏதாவது ஒரு கீரை அல்லது பழத்தில் ஸ்மூத்தி.

இரவு : காய்கறி சாலட் மற்றும் சூப்.

இந்த டயட்டை பின்பற்றுவதனால் ஏற்பாடும் நன்மைகள்

இந்த டயட்டை உள்ளவை ஜீரண மண்டலத்தில் உள்ள பாதிப்புகளை ஆற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.
தேவையான நீர்சத்தை உடலுக்கு தந்து நச்சுக்களை வெளியேற்றும் .
உடலுக்கு புத்துணர்சியை தரும்.
3 நேரங்களுக்கு பதிலாக 5 நேரங்களுக்கு குறைவான அளவு சாப்பிடுவதால் போதிய ஓய்வு ஜீரண மண்டலத்திற்கு கிடைக்கும்.
எளிதில் ஜீரணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button