இனிப்பு வகைகள்அறுசுவை

சுவையான பாதுஷா நீங்களும் செய்யலாம்!…

தேவையான பொருட்கள்

மைதா – அரைக் கிலோ
உருக்கின டால்டா – 200 கிராம்
தண்ணீர் – 300 மில்லி
லெமன் சால்ட் – கால் தேக்கரண்டி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை

பாகு செய்ய:

சர்க்கரை – அரைக்கிலோ
தண்ணீர் – கால் லிட்டர்

pathusa

செய்முறை:

மைதா மாவின் நடுவில் குழி செய்து, அதில் சோடா உப்பு, லெமன் சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு பிசையவும். மாவை நன்கு பிசைந்து புரோட்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

பிசைந்த மாவினை ஊற விடவேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி, எலுமிச்சையை விட கொஞ்சம் பெரிய அளவிற்கு, பாதுஷா வடிவத்திற்கு அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். மிகவும் மெல்லிய தட்டையாக இருக்கக் கூடாது.

தேவைப்பட்டால் ஓரங்களில் பின்னுதல் முறையிலு செய்யலாம். பிறகு தட்டிய மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக கிண்ணம் போல் வருமாறு அழுத்தி விடவும்.

அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ சர்க்கரைக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதலில் ஒரு கொதி வந்தவுடன் 100 மில்லி பால் ஊற்றவும்.

பால் ஊற்றியதும் அழுக்குகள் அனைத்தும் திரண்டு பாகின் மீது மிதக்கும். அவற்றை எடுத்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறவிடவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் போட்டு பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து மிதக்கும்.

பிறகு, தீயை குறைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். பொன்னிறமாக மாறியதும், எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும்.

எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சர்க்கரை பாகு சற்று ஆறியதும், பாதுஷாக்கள் அனைத்தையும் சீனிப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும். சுவையான பாதுஷா தயார்.

Related Articles

One Comment

  1. Fine healthy dishes.
    I need a chutney roasted peanuts with raw mango redchilly & garlic.
    This chutney is famous in Burma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button