சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

ld1926சரும வறட்சி உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படக்கூடியவை. இவ்வாறு சரும வறட்சி ஏற்பட்டால், முறையான பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது. இல்லாவிட்டால், அது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, சரும வெடிப்புக்கள், சருமம் மென்மையிழத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இத்தகைய சரும வறட்சியைத் தடுக்க எந்த பொருட்களைப் பயன்படுத்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், சரும வறட்சியில் இருந்து விரைவிலேயே விடுபடலாம்.

• ஒரு பெளலில் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தயிரை ஊற்றி நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இந்த கலவையை தினமும் வறட்சி ஏற்படும் இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

• சீஸ் ஒரு மென்மையான பொருள். இத்தகைய பொருளை சருமத்தில் பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் பொலிவாகவும் மாறும். அதற்கு ஒரு பௌலில் 1/2 கப் துருவிய சீஸ் மற்றும் பால் சேர்த்து, ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதனை சருமத்தில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வறட்சியானது நீங்கிவிடும்.

• அவகேடோவும் சரும வறட்சியைப் போக்குவதில் ஒரு சிறப்பான பொருள். அத்தகைய அவகேடோவை அரைத்து, அதனை பாலுடன் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

• நல்ல மென்மையான மற்றும் வறட்சியில்லாத சருமம் வேண்டுமெனில், 1 கப் பாதாம் பொடியில், 1/2 கப் பால் சேர்த்து கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

• 5 தக்காளியை சற்று கெட்டியாக அரைத்து, அதில் 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதனை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, இறுதியில் பாலால் கழுவி, பின் தண்ணீரில் அலச வேண்டும்.

மேலே கூறியுள்ள இந்த இயற்கை முறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் உண்டாகும் வறட்சி படிப்படியாக நீங்கும்.

Leave a Reply