எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

“அத்தி பூத்தாற் போல” என்கிற பழமொழியை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, அத்திப் பூ பூப்பது மிக அரிதானதாக இருப்பதால் இந்த வாய்மொழி வார்த்தை காலம்காலமாக வந்துள்ளது. மருத்துவ குணம் நிறைந்த பழங்களின் ஒன்று அத்தி. இன்று வரை அத்திப்பழத்தை பற்றிய பல ஆய்வுகள் உலக நாடுகளில் நடந்து வருகிறது.

இதன் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக இதுவரை செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், பலவித ஆரோக்கிய குணங்கள் இதில் உள்ளதாம். அத்திப்பழத்தில் இருக்க கூடிய பல்வேறு மருத்துவ குணங்களும் அத்தியின் இலைகளிலும் உள்ளது.

இதன் இலை உடல் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் வரை தீர்வுக்கு கொண்டு வரும்.

இதனை டீ தயாரித்து குடித்தால் எல்லா வித நலன்களும் உங்களுக்கு கிடைக்குமாம். இனி அத்தி இலையின் மகிமைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

நார்சத்து

அத்தி பழத்தை போன்றே அத்தி இலையிலும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனை பயன்படுத்தி உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைத்து விடலாம். அத்தி இலையை டீயாக தயாரித்து குடித்தால் இதற்கு தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

உயர் ரத்த அழுத்தம்

எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் உங்களின் பழக்கமாக இருந்தால் அதை எளிதில் குறைக்கும் தன்மை அத்தி இலையில் நிறைந்துள்ளது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் அத்தி இலை உதவுகிறது. காரணம் இதிலுள்ள பொட்டாசியம் என ஆய்வுகள் சொல்கின்றன.

புற்றுநோய்

இத்தாலிய நாட்டின் ஆராய்ச்சியில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அத்தி இலை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும் தன்மை பெற்றதாம். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஆற்றலை தருகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க

உடலில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் கூடினால் பல நோய்கள் இதை தொடர்ந்து உண்டாகும். கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்பு அத்தி இலைக்கு இருக்கிறதாம். மேலும், இவை செரிமானத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய், அடிவயிற்று புற்றுநோய் போன்றவற்றை தடுத்து விடும்.

எலும்பு நோய்களுக்கு

எலும்புகள் தேய்மானம் அடைந்தால் அதை தடுக்க புது வித மருத்துவ முறை உள்ளது. அத்தி இலையை பயன்படுத்தி எளிதாக எலும்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவிட இயலும். மேலும், எவ்வளவு வயதானாலும் எலும்புகள் அதிக உறுதியுடன் இருக்க இது உதவும்.

இளமையை பாதுகாக்க

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கும் அத்தி இலையில் வழி உண்டு. அத்தி இலையின் சாற்றை முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள், கரும்புல்லுகள், முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் யாவும் காணாமல் போய் விடும். ஆதலால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயிற்கு தீர்வை தர அத்தி இலை முழுமையாக உதவும். பலவித ஆய்வுகளில் இது நிரூபணம் ஆகியுள்ளது. சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய தன்மை இந்த அத்தி இலையில் உள்ளதாம். இதை இப்படி டீ போன்று தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

தேவையான பொருட்கள்

டீ தயாரிப்பதற்கு முன் சில முக்கிய பொருட்களை எடுத்து கொள்ளவும். அவை, அத்தி இலைகள் 5 நீர் 1 கப் தேன் 1 ஸ்பூன் கண்ணாடி ஜார் 1

தயாரிப்பு முறை

அத்தி இலை டீயை தயாரிக்க சில வழி முறைகள் உள்ளன. அதற்கு முதலில் அத்தி இலையை வெயிலில் உலர வைக்க வேண்டும். அடுத்து, இந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இந்த நீரில் காய்ந்த அத்தி இலை 2 சேர்த்து கொண்டு, நன்றாக கலக்கி வடிகட்டி கொள்ளவும். தேவைக்கு ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.

தொடர்ந்து குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.

Leave a Reply