கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

கன்னம் என்றாலே அழகுதான். பெண்களுக்கு முகத்தில் கண்கள் எவ்வளவு அழகை சேர்க்குமோ அவ்வளவு கன்னமும் சேர்க்கும். குழந்தைகளுக்குக்கான அடையாளமே கன்னம் தான். அதனாலோ என்னவோ, யாருக்கு மெத்து மெத்து கன்னம் இருந்தாலும் அவர்களை குழந்தைகளுடன் ஒப்பிடுகிறோம்.

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

குண்டான கண்ணம் பார்த்து ஆசைபடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எவரும் பலித்ததும் இல்லை. தனக்கும் அது போன்று கண்ணங்கள் வேண்டும் என்று ஆசைவராதவர்கள் கைவிட்டு எண்ணிவிடலாம். இப்படி எல்லோரும் ஆசைபடும்படி கொலுகொலுக் கன்னம் பெற எண்ண செய்ய வேண்டும் என்று தெரியுமா?

இதோ சில கன்னத்திற்கான எக்ஸர்சைஸ்… டிரை பண்ணி பாருங்கள்…

1. காலை எழுந்ததும், பல் துலக்கிவிட்டு, வெறும் வாயில் நீர் வைத்து நன்கு கொப்பளியுங்கள். 2 நிமிடம் தொடர்ந்து இவ்வாறு செய்யுங்கள். சில வாரங்களில் கன்னம் உப்பி மெத்து மெத்தென்று காணப்படும்.

2. சும்மா இருக்கும் நேரத்தில் “ஊ…” என்றவாறு உதடுகளை சுருக்கி வையுங்கள். 30 வினாடிகள் கழித்து சதாரணமாக விட்டு விடுங்கள். பின் குறுகிய இடைவேளிவிட்டு மறுபடியும் அதேபோல் செய்யுங்கள். 2 முதல் 4 முறை செய்யுங்கள். இவ்வாறு செய்தால், சில நாட்களில் கன்ன தசைகள் இளகி வளர ஆரம்பிக்கும்.

3. இரவு தூங்கச்செல்லும் முன்பு கன்னத்தை மாய்ட்டிரைசர் கொண்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

4. தினமும் ஒரு பலூன் ஊதுங்கள்.

மேலும் சில அழகுக் குறிப்புகள்:

1. தேன் மற்றும் ஏதேனும் குழையும் வகைப்பழம்- வாழை/பப்பாளி போன்றது. இரண்டையும் குழைத்து முகத்தில் தடவி 20 வினாடி மசாஜ் செய்து ஊர விட்டு கழுவவும். இது கன்னங்களின் தோலை மினுமினுக்க செய்து ஆரோக்கியமான தோற்றத்தை தரும்.

2. வென்னைய், நெய், தேங்காய் எண்ணை போன்றவற்றை கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்யுங்கள்.

உட்கொள்ள வேண்டியவை:

1. உடலுக்கு சத்தான உணவு கிடைக்காவிட்டால் கன்னம் மட்டும் இல்லை சருமம், முகம் என எதுவும் அழகான தோற்றத்தை தராது. எனவே அதிக காய்கறிகள், பழ வகைகள் உட்கொள்வது சிறந்த பலனளிக்கும்.

2. அவ்வப்போது தண்ணீர் அருந்தி உடலையும் சருமத்தையும் ஈரப்பதம் விலகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நினைத்தது போல அழகான கன்னங்கள் கிடைக்கும். அழகும் சேரும்.

Leave a Reply