ஆரோக்கியம்அழகு குறிப்புகள்பெண்கள் மருத்துவம்

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நன்மை தருவதற்கு மட்டும் தானே தவிர கெடுதல் தருவதற்கு அல்ல. ஆனால் இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சிபெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அப்படி பேஸ்புக் எனும் சோஷியல் மீடியா மூலம் எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

ஒருவர் தனது புகைப்படத்திற்கு அல்லது பதிவிற்கு தொடர்ந்து லைக் செய்து, கருத்து தெரிவித்து வந்தால் அவருடன் பெண்கள் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அருகில் இருப்பவர்களுடன் பிடிப்பு இல்லாத நட்பு உடைய பெண்கள் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர்களை தேடி ஏமாந்து போகின்றனர்.

facebook

பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற லைக்ஸ் மோகத்தினாலும் பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர்.

இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!

சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது.

இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது.

இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

இளவட்ட வயதான 17 – 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது.

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button