ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்குபெண்கள் மருத்துவம்

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலி!…

நாட்சுரல் சைக்கிள் (Natural cycle) என்ற செயலி தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலியாகும். இந்த செயலியானது மருந்து , அறுவை சிகிச்சைகள் இல்லாத தொல்லையற்ற முறையாக பலப் பெண்களால் கருதப்படுகிறது.

நாட்சுரல் சைக்கிள் செயலி உங்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கும். இதன் மூலம் உங்களின் உடல் நிலையை கூர்ந்து ஆராய்ந்து முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்கிறது இந்த செயலி.

பின் இந்த தகவல்களைக்கொண்டு மாதம் முழுவதும் உங்களை வழிநடத்துகிறது.

இது பாதுகாப்பானது என்றும், நம்பக்கூடியது என்றும் FDA-வால் அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகளவில் 625,000 பெண்கள் இதனை உபயோகித்து பயன்பெற்று வருகின்றனர்.

pregnet avoid

இந்த செயலி என்ன செய்கிறது?

முதலில் இந்த செயலியை தங்களின் போன்களில் பதிவிறக்கம் செய்து திறக்கவேண்டும். திறக்கும் போதே உங்களின் எதிர்பார்ப்பு என்ன வென்று கேட்கிறது.

அதாவது, குழந்தைக்காக காத்திருக்கிறீர்களா இல்லை குழந்தை தற்போது வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? போன்ற கேள்வி.

பின் மாதவிடாய் மற்றும் உடல் நலத்தை பற்றி கேட்டுக்கொள்கிறது. அதாவது, 28 நாள் சைக்கில் நம் உடல் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும், ஒழுங்கற்ற மாதவிடாய் பற்றிய தகவல், எத்தனை நாட்கள் தள்ளிவரும், முன்பு வரும் , மாறி வரும் என்று முழுவதும் கேட்டுக்கொள்கிறது.

பின்னர் உங்களுக்கான பிரத்யேக மாத காலண்டரை உருவாக்குகிறது. இந்த காலண்டரில் உடல் அளவில் , நீஹ்கள் எப்போது முழு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள், என்று கருத்தரிக்கும் சாத்தியகூறுகள் அதிகம் இருக்க்கிறது என்பதை பட்டியலிட்டு காண்பிக்கும்.

அதாவது ஃபெர்டைல் (fertile) நாட்கள், நான்- ஃபெர்டைல் (non-fertile) நாட்கள் என்று குறிப்பிடும். இந்த கண்கானிப்பைக் கொண்டு என்று கருதடை சாதனம் தேவைப்படும், என்று தேவைப்படாது என்பதை கணித்துவிடலாம்.

இந்த செயலியானது 93.7 சதவிகிதம் சரியாக கணிக்கிறது என்று அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. எனினும் சரியாக பின்பற்றி பயன்படுத்தவில்லை என்று மற்ற 4% பெண்கள் ஒத்துக்கொண்டனர்.

இது எந்த அளவு துல்லியமாக கணிக்கிறது என்ற கேள்விக்கு அறிவியல் அறிஞர்கள்

‘சரியாக பின்பற்றிவரும் நிலையில் 99 சதவிகிதம் துல்லியத்தை தருகிறது இந்த செயலி’ என்று கூறுகின்றனர்.

இந்த செயலி மாதத்திற்கு 10 டாலர் மற்றும், வருடத்திற்கு 80 டாலர் செலவில் வினியோகிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button