மழை காலம் வந்துவிட்டது. கூடவே கொசுக்களும் அதிகம் பரவலத் தொடங்கியுள்ளது.
கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு விதமான முயற்சிகள்மேற்கொண்டாலும், அதிலிருந்து முழுமையாக பலன் பெறுவது என்பது கடினமானதே. அந்த வகையில் கொசுவினால் ஏற்படும் காயங்கள் அதனால் உண்டாகும் எரிச்சல் இவற்றை போக்குவதற்கு சில வழிகள்,
குளிர் பேக்
குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டிகளை எரிச்சல் ஏற்படும் இடங்களில் வைத்தால் காயம் சற்று நீங்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா பவுடரை கொசு கடித்த இடத்தில் தடவினால் எரிச்சல் இல்லாமல் காயமும் சீக்கிரம் குணமடையும்.
ஆல்கஹால் வைப்ஸ்
எங்கு கொசு கடித்துள்ளதோ, அந்த இடத்தில் இந்த வைப்ஸ்யை தடவினால் உடனே எரிச்சல் குறைந்து தழும்பு மறையும்.
அலர்ஜி கிரீம்
இந்த கிரீமை கடித்த இடத்தில் தடவினால் அங்கிருக்கும் சூட்டை தனித்து எரிச்சலை குறைக்கும். அத்துடன் புண்கள் மேலும் பரவமால் தடுக்கும்.
மழை காலங்களில் கொசுக்கள் அதிகமாக வரக்கூடியது இயல்பானதே. அவை வீட்டிற்குள் வராமல் இருக்க வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.