ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம்!…

பாவங்கள்

மற்ற பாவங்களை காட்டிலும் துரோகம், விபச்சாரம், சட்டவிரோத செயல்கள் மற்றும் உறவுகளே கொடிய பாவங்களாக கருதப்படுகிறது. இந்த செயல்கள் தர்மத்தின் பார்வையில் மட்டுமின்றி இப்போதுள்ள சமூகத்தின் பார்வையிலும் பாவாமாகவே கருதப்படுகிறது. இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும்.

விபச்சாரம்

அனைத்து மத புனித நூல்களிலும் குறிப்பிட்டுள்ள படி திருமணம் ஆகாத இருவரோ அல்லது திருமணம் ஆன நபருடன் உறவு கொள்வதோ பாவமான செயலாகவே கருதப்படுகிறது. இந்து மதத்தின் படி இந்த தர்மத்தை அழிப்பதாகும்.

இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை, இதில் ஈடுபடும் இருவருக்குமே தண்டனைகள் நிச்சயம். அந்த தண்டனைகள் வாழும்போதே அவர்களுக்கு கிடைக்கும்.

குறைந்த ஆயுள்

திருமணம் ஆன வேறொரு நபருடன் முறையற்ற உறவில் ஈடுபடும் ஆணோ, பெண்ணோ இருவருமே தங்களின் ஆயுட்காலத்தை குறைத்து கொள்கிறார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் பூமியில் வாழும் காலம் குறைவாகவே இருக்கும்.

படிப்படியான ஆற்றல் இழப்பு

படிப்படியாக உங்கள் உடலின் ஆற்றலும், வீரியமும் குறையும். எதை வைத்து இந்த பாவச்செயலை புரிகிறீர்களோ அது இல்லாமல் போகும்.

ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, பெண்களுக்கு அழகு மற்றும் வசீகரம் குறைதல் போன்றவை ஏற்பட்டு உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை கெடுக்கும்.

வெறுப்பு நிறைந்த வாழ்க்கை

இந்த பாவம் புரிந்தவர்கள் வாழும்போதே தங்களுடைய ஆன்மா, உடல், மனம் என அனைத்தாலும் வெறுக்கப்படுவார்கள்.

அவர்களின் மனம் அமைதி இழந்து சுற்றியிருக்கும் அனைவரையும் காயப்படுத்தி தானும் காயப்படும்.

சுய அவமதிப்பு

அவர்களின் மனஅழுத்தம் மற்றும் மற்றும் பதட்டத்தால் பைத்தியம் போல மாறிவிடுவார்கள், அவர்களின் கண்களுக்கு அவர்களே அருவருப்பாக காட்சியளிப்பார்கள். இது அவர்களின் ஆன்மா மற்றும் ஆரோக்கியம் இரண்டையுமே சிதைக்கும்.

வறுமை

காலங்கள் செல்ல செல்ல அவர்களிடம் இருக்கும் செல்வம் மற்றும் சேமிப்பு என அனைத்தையும் இழக்க நேரிடும். இறுதியில் கடனில் மூழ்கி தீரா துயரத்துடன் இறக்க நேரிடும்.

தனிமை

இந்த பாவங்கள் புரிபவர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு மற்ற உறவுகளால் தனிமைப்படுத்த படுவார்கள். அவர்களை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகளின் அளவு அதிகரிக்கும்.

நீங்கள் இறந்த பிறகு உங்களின் வாழ்க்கையானது எவராலும் மதிக்கப்படாது, அவர்கள் இறந்ததே நல்லது என்று அனைவரும் சிந்திப்பார்கள்.

அழுகும் உடல்

இந்த பாவங்கள் செய்தவர்கள் உடல் சாகும் முன்னே தொற்றுநோய்களால் அழுகக்கூடும், சருமம் தொடர்பான நோய்கள் நிறைய ஏற்படும்.

அவர்களின் மூட்டுகளும், எலும்புகளும் அவர்களை கைவிட்டிருக்கும், நடமாடுவதே அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

deth

இயற்கைக்கு மாறான மரணம்

அவர்களின் மரணமும், அவர்கள் மரணம் நெருங்கும் காலமும் மிகவும் மோசமானதாக இருக்கும்.

அவர்களுக்கு இயற்கையான மரணம் கிடைக்கும் யோகமில்லை, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில்தான் அவர்களுக்கு மரணம் ஏற்படும்.

பாம்பு கடி, வாகன விபத்து, மாடியிலிருந்து விழுதல் போன்ற முறையில் துர்மரணங்களே நிகழும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button