ஆண்களுக்குஅழகு குறிப்புகள்

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அழகு பராமரிப்பு பெண்களுக்கு மட்டும் என்று வரையறுத்தவர் யாருமில்லை.

அழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை.

தன் அழகை பராமரித்து பெர்பெக்ட் தோற்றத்துடன் காட்சியளிப்பது அனைவருக்குமே ஒருவித தன்நம்பிக்கையை கொடுக்கும். ஆதலால், தயங்காமல் ஆரம்பித்து பயனடையுங்கள்.

boy

சரி எப்படி பராமறிப்பது என்று கேட்குறீர்களா? இதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்,

*பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணை சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணை வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்து வது தான்.

ஜெல் பயண்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.

*முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது.

ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணை அல்லது தூய பாதாம் எண்ணையை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.

*கனினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெல்லரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள்.

மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும். மற்றும் விரைவான பலனுக்கு ‘அன்டர் ஐ க்ரீம்’ பயண்படுத்தலாம்.

*பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.

*ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வரண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும்.

அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button