ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

மனிதத்தன்மையை இழக்கவைக்கும் இந்த மது!

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து., புகை உயிருக்கு பகை என்று எத்தனை வாக்கியம் இருந்தாலும்., புண்பட்ட மனதை புகை விட்டே ஆத்துகின்றனர். அது போலவே புகை விட்டும் மனது ஆறவில்லை என்றால் அடுத்தகட்டமாக பானத்தை விட்டு ஆத்துகின்றனர்.

இதில் இவர்களின் பெருமை என்னவென்றால் மதுகுடிப்பவன் மது பழக்கமில்லாதவனை பார்த்து ஏளனமாக சிரித்து கேலி செய்வது.

அவர்கள் கூறுவது மது அருந்துவதால் நான் திடமாக இருப்பதாகவும், நன்றாக பசிப்பதாகவும் நாளடைவில் நான் இறந்துவிட்டாலும் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்து போகிறான் என்பார்கள்.

மாறாக நீ இறந்துவிட்டால் பாவம் ஒன்றையும் அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டான் என்று கூறுவார்கள்.

arac

அந்த வகையில் மது அருந்துபவர்களுக்கு இதய நோய்யானது வராது என்று சில ஆய்வின் முடிவில் தகவல் வந்தது.

ஆனால் அவ்வாறு அருந்துவதால் தினமும் அருந்தும் ஒரு குவளை மதுவிற்கு மது அருந்துபவரின் மொத்த வாழ்நாளில் 20 விழுக்காடு அளவிற்க்கான வாழ்நாளை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். ஒரு நாள் அருந்தும் ஒரு குவளை மதுவிற்க்கே இந்த நிலைமை……..

மேலும் மேற்க்கூறிய அறிவிப்பு ஆய்வு மேற்கொண்ட இடம் நியூயார்க். வெளிநாடுகளில் உள்ள மதுவானது அருந்தும் போது நன்றாக இருக்கும் என்று பலர் கூறியிருப்பதை நமது வாழ்வியல் வழக்கத்தில் நாம் கேட்டிருப்போம்.

வெளிநாட்டில் உள்ள மதுவுக்கே அந்த நிலைமை என்றால் நமது நாட்டில் உள்ள மதுவினை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் இளையவர் முதல் பெரியவர் வரை கூறுவது சரக்கு காட்டமாக இருக்கிறது என்பதே.,

குளிர்பானத்தை போல மதுவை அருந்தும் மேலை நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் நமது நாட்டில் உள்ள மதுக்களை அருந்த நமது குடிமகன்கள் படும்பாடை பார்க்கும் போது அவர்களுக்கு எமன் ஏரோபிளானின் வேகத்தை விட விரைவாக வருகின்றான் என்பதே அர்த்தம்…..

ஆகவே மது அருந்தும் நபர்கள் தங்களின் மது அருந்தும் செயல்பாடுகளை குறைத்து தங்களின் வாழ்நாளை பாதுகாத்து தங்களுக்காகவும் தங்களின் குடும்பத்திற்க்காகவும் வாழ நினையுங்கள்………

இந்த செய்தியின் மூலமாக நாங்கள் கூற நினைப்பது., மது நாட்டிற்கும் கேடு – வீட்டிற்கும் கேடு – உயிருக்கும் கேடு……

மனிதத்தன்மையை இழக்கவைக்கும் இந்த மதுவை அறவே ஒழிப்போம் – மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button