விழிப்புணர்வை அதிகரிக்கும் கொட்டாவி!…

2000 வருடங்களாக கொட்டாவி வருகின்றது என்றால் தூக்கம் வருவதை வெளிப்படுத்தும் அறிகுறி என பலர் கூறுகின்றனர்.

ஆனால் கொட்டாவி வருவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதற்கமைய

சமூகம் பிரச்சினை
மனரீதியான பிரச்சினை
காய்ச்சல்
அசதி
மனவுளைச்சல்
மருந்துகளின் பாவனை போன்றவற்றை கொட்டாவி வெளிப்படுவதாக மன நல வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.
எனினும் கொட்டாவியால் பல்வேறு பயன்களும் உள்ளதாக மருத்துவ நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

கொட்டாவி விடுவதால் விழிப்புணர்வு அதிகரிக்கும்
தசைகள் அசைவதால் தூக்கம் கலையக்கூடும்.
கொட்டாவி விடும் போது ஏற்படும் கண் அசைவு பார்வைத் திறனை அதிகரிக்கும்.
நமது மூளையின் சூட்டைத் தணிக்கும்
நமது மூளையில் இறுக்கமான பகுதிகளைத் தளர்த்த கைகொடுக்கும்.
நீண்ட தூர பயணத்தின் போது வரும் கொட்டாவிகள் உடல் உளைச்சலை குறைப்பது போன்ற நன்மைகள் உள்ளது.

நமக்கு அருகில் உள்ள ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நமக்கும் கொட்டாவி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply