தொப்பை குறைய

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை
வயிறு, தொடை மற்றும் இடை பகுதியில் பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கொடி இடை தட்டையான சிக்கென்ற வயிற்றுப் பகுதி இவற்றை வேண்டாம் என்று கூறாத பெண்கயே கிடையாது.இவற்றை பெற நாம் நம் பழக்கங்களை மாற்றி அவற்றை தொடர்ந்து எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். தினமும் கண்ணாடியை பார்க்கும் போது இனிமேல் கடுமையான டயட் மற்றும் உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று நாம் அனைவருமே நினைப்பதுண்டு. ஆனால் உணவை பார்க்கும் போது நாளையில் இருந்து டயட் இருக்கலாம் என்று நான்றாக சாப்பிட்டுவிட்டு, மறுநாள் சரியாக சாப்பிடாமல் டயட் இருப்பார்கள்.அதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. இதனால் நம்மால் எந்த உடல் பயிற்சியையும் நெடுநேரம் பண்ணமுடியாமல் போய்விடும். ஆகவே எப்போதும் சீரான டயட்டை கடைப்பிடிக்கவேண்டும். பசித்த பின் மட்டும் சாப்பிடுங்கள், அதுவும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம்.சாப்பிடும் போது தண்ணீர் குடிக்ககுகூடாது, அரை மணிநேரத்திற்கு முன் அல்லது பின் குடிக்க வேண்டும். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும். மேலும் வீட்டில் இருக்கும் பெண்கள் காலையிலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கணவர், குழந்தைகளை அனுப்பி விட்டு நன்றாக தூங்குவார்கள்.

அல்லது டிவி பார்த்தபடி நெறுக்கு தீனி சாப்பிட்டுகொண்டு படுத்துக்கொண்டு பார்ப்பார்கள். இதனால் பெண்களுக்கு வயிற்றில் தொப்பை போடுகிறது. மேலும் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடாமல் எந்த நேரமும் டிவி பார்த்துக்கொண்டிருப்பதும் உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் கவனம் செலுத்தினால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

Related posts

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.

nathan

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

ஏழே நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா?

nathan

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

nathan

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

தொப்பை அதிகரிக்க போகின்றது முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்!!

nathan

தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம்

nathan

உங்கள் கீழ் வயிறு / பெல்லி கொழுப்பை கரைக்க உதவும் அருமையான 5 ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்

nathan

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika