ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

இது உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்!..

ரசிக்க வைக்கும் பளீர் நிறம், தித்திக்க வைக்கும் வித்தியாசமான சுவை, பெண்களின் உதட்டோடு ஒப்பிடப்படும் அழகு, தோற்றத்தைப் போலவே விலையிலும் சற்று அதிகம் என்றாலும் செர்ரி எப்போதும் ஸ்பெஷல்தான். இதன் ஆரோக்கியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி உணவியல் நிபுணர் சிவப்ரியா மாணிக்கவேல் பேசுகிறார்.

செர்ரி பழங்கள் நம் நாட்டில் உணவு தயாரிப்புகளில் அலங்காரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மற்ற பழங்களை ஒப்பிடும்போது செர்ரி பழம் விலையுயர்ந்ததாக இருக்கிறது.

செர்ரிக்கள் அதிக உயரமான, குளிர்ச்சியான பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் அதிகமாக விளைகின்றன.

குறைந்த கலோரி அளவையும் மற்றும் குறைந்த கொழுப்பு சத்தையும் உடையது. பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பது செர்ரியின் சிறந்த ஆதாரமாக உள்ளது.

cerry

தூக்கமின்மையினால் வரும் தலைவலி, எரிச்சல், சோர்வு இன்றி புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடிகிறது. மேலும் துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற கனிம ஆதாரங்களும் நமது உடலுக்கு தேவையான சரியான அளவில் செர்ரி பழத்தில் உள்ளது.

பொட்டாசியம், செல் மற்றும் உடல் திரவங்களின் முக்கிய பாகமாகும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

இனிப்பு மற்றும் புளிப்பு என இரண்டு வகை சுவையைக் கொண்டது செர்ரி. இந்த இருவகைகளுமே அத்தியாவசியமான பல சத்துக்களை கொண்டுள்ளது.

செர்ரிப்பழம் புத்தம்புதிய கனியாக இருக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது.

ஃப்ரெஷ் செர்ரிக்களை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். ஆனால், பதப்படுத்தப்பட்டு, கூடுதல் சுவைக்காக சர்க்கரை கலந்த செர்ரிக்களை கடைகளில் வாங்கி அதிகளவு உட்கொள்ளக்கூடாது.

அதிக சதை மற்றும் சாறு உள்ளவை செர்ரி. இதில் திராட்சையைப் போன்ற சுவை உடையவை செர்ரி பழங்கள். நன்மையை தரக்கூடிய பல நிறமிகளை (பிக்மென்ட்ஸ்) உடையது.

சிவப்பு அல்லது ஊதா நிறங்களில் இருக்கும் அதன் தோல்கள், ஆன்தோசையனின் பிக்மென்ட்ஸ்சை அதிகமாக கொண்டது.

மெலடோனின் என்னும் ஒரு ஹார்மோன் செர்ரியில் உள்ளது. இந்த ஹார்மோன் நமது உடலின் விழிப்புணர்வு தூக்கம், உயிரியல் கடிகாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதனால் நமது நரம்புகள் அமைதி(Calming effect) அடைகின்றன, நல்ல அமைதியான உறக்கமும் கிடைக்கிறது.

மெலடோனின் என்னும் ஒரு ஹார்மோன் செர்ரியில் உள்ளது. இந்த ஹார்மோன் நமது உடலின் விழிப்புணர்வு தூக்கம், உயிரியல் கடிகாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதனால் நமது நரம்புகள் அமைதி(Calming effect) அடைகின்றன, நல்ல அமைதியான உறக்கமும் கிடைக்கிறது.

புதிய பழுத்த செர்ரிக்களை சிறிது நாட்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். கடைகளில் இருந்து வாங்கும்போது பிரகாசமான, பளபளப்பான தோல்களையும், பச்சை நிற காம்பினையும் கொண்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

பழம், கேக்குகள், ரொட்டி, Muffins மற்றும் குக்கீகளில் உலர்ந்த செர்ரிக்களை சேர்க்கலாம்.

இனிப்பு, பை ஃபில்லிங்ஸ் மற்றும் பேஸ்டரீஸ் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். புளிப்பு செர்ரிகளில் முக்கியமாக சாஸ், ஜாம்ஸ், மஃபின்ஸ் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட செர்ரியில் இனிப்புச் சுவைக்காக அதிகளவு சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும்.

இது உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். குறிப்பாக, நீரிழிவு உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button