உடல் பயிற்சிஆரோக்கியம்

ஓட்டம் எப்படி வெயிட்டைக் குறைக்கிறது தெரியுமா?

உடல் எடையைக் குறைப்பதில் ஓட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கார்டியோ பயிற்சியுடன் மட்டும் இணைந்திருக்கவில்லை. மாறாக இதில், உடலுக்குத் தேவையான ஆரோக்கிய நலன்கள் நிறைய இருக்கிறது.

உண்மையில் ஓட்டப் பயிற்சியை பிரபலப்படுத்தியது எது தெரியுமா? இதற்கு உடற்பயிற்சி கருவிகள் எதுவும் தேவையில்லை, பயிற்சியில் ஈடுபடும் நபரைப் பொறுத்து, எப்போது வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

சரி ஓட்டம் எப்படி வெயிட்டைக் குறைக்கிறது தெரியுமா?

ஓட்டத்தில் அடிப்படை ஓட்டம், நீண்ட தூர ஓட்டம், இடைவெளி விட்டு ஓட்டம் என நிறைய வகைகள் இருக்கின்றன. இதில் உங்களது வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் நீங்கள் பின்பற்றலாம்.

 

நிறைய கலோரிகளை எரிக்கும்

தினமும் நீங்கள் சாப்பிடுவதை விட அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். எடை குறைய வேண்டும் என்பவர்களுக்கு இது மிகச்சிறந்த பயிற்சி. ஏனெனில் மற்ற பயிற்சிகளை விட ஓடும் போது நிறைய கலோரிகள் எரியும். ஓடும் போது உங்களது அனைத்துத் தசைகளும் வேலை செய்யும். மற்ற உடற்பயிற்சிகளைக் காட்டிலும் ஓட்டத்தில் தான் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

run1

உயர் தீவிர இடைவெளி பயிற்சி

பொதுவாக ஓட்டம் கலோரிகளை எரிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த உயர் தீவிர இடைவெளி பயிற்சியில் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் கலோரிகள் எரிக்கப்படும். இதில் அனைத்து உறுப்புகளும் செயல்படுகிறது, அதே நேரத்தில் இதற்கு அதிக எனர்ஜியும் தேவை. இதனை ’ஆஃப்டர்பர்ன் எஃபெக்ட்’ எனக் கூறுவார்கள். சைக்கிள் ஓட்டுவதும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

பசியைக் குறைக்கும்

உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக பசி எடுக்கும் என்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த உயர் தீவிர இடைவெளி பயிற்சியில் அப்ப்டியல்ல. இது பசியைக் குறைக்கும், அதனால் நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். பசியைத் தூண்டும் ‘க்ரேலின்’ எனும் ஹார்மோனின் சுரப்பை இது கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொப்பைக்கு சிறந்தது

தொப்பை மட்டும் உடல் நலத்திற்கு தீங்கானது அல்ல. ஆனால், நம்மிடையே அதிக சங்கடத்தை ஏற்படுத்துவதும் இது தான். உங்களது உணவு முறையை மாற்றாமல் ஓட்டத்தின் மூலம் தொப்பைக் குறைக்கலாம்.

மற்றவை

இயதநோய் – தினமும் 5-10 நிமிடம் வரை ஓடுவது இதயநோய் வராமல் தடுக்கும்.

ரத்த சர்க்கரை – ஓட்டம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது.

கண்புரை – மிதமான-வேக நடை மற்றும் தீவிரமான ஓட்டம் ஆகிய இரண்டும் கண்புரை நோய் வராமல் பாதுகாப்பதாக, ஆய்வு ஒன்று கூறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button