யோக பயிற்சிகள்உடல் பயிற்சி

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

வழக்கமானதைவிட வித்தியாசமான ஒர்க்அவுட்களையே ஜோடிகள் விரும்புகின்றனர் என்பதால் புதிய உடற்பயிற்சி முறைகள் அறிமுகமாகியுள்ளன.

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ்

ஜோடியாக கடற்கரைக்குச் செல்வது, ஜோடியாக சினிமாவுக்குச் செல்வது, ஜோடியாக வேலைக்குச் செல்வது, ஜோடியாக ஷாப்பிங் செல்வது எனப் படிப்படியாக முன்னேறி, ஜோடியாக ஜிம்முக்குச் செல்லும் போக்கு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.

சமீபகாலமாக உடற்பயிற்சி நிலையங்களில் `ஜோடி ஃபிட்னஸ்’ பயிற்சிக்கு செம வரவேற்பு!

ஜோடி ஃபிட்னஸில் இருக்கும் முக்கியமான கான்செப்ட், இருவரும் ஒருவருக்கு ஒருவர் அரவணைத்து, உதவி செய்து, ஒற்றுமையாய் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஒற்றுமை, உதவும் மனப்பான்மை, அரவணைத்தல் ஆகிய அனைத்தும் இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்கள். உடற்பயிற்சியில் அவற்றைக் கற்கும்போது, அது வீடுகளிலும் பிரதிபலிக்கும்.

jodi fitness

வழக்கமானதைவிட வித்தியாசமான ஒர்க்அவுட்களையே ஜோடிகள் விரும்புகின்றனர் என்பதால் புதிய உடற்பயிற்சி முறைகள் அறிமுகமாகியுள்ளன.

ஜோடி உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, பார்ட்னர் ஹீல் டேப், ஸ்குவாட் ஜம்ப், டிரைசெப்ஸ் கிக்பேக், பார்ட்னர் பிரஸ் அண்ட் ரோ, வீல்பாரோ புஷ் மற்றும் ரீச் அண்ட் டச் பிளாங்க் என இருவரும் இணைந்து செய்யும் வகையில் பல உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன.

அதேபோல ப்ரீனெமி பார்ட்னர் ஒர்க்அவுட், குபிட் கிராஸ்பிட் ஒர்க்அவுட், பார்ட்னர் டிரேக் ஒர்க்அவுட், பார்ட்னர் பால் ஒர்க்அவுட் என, வித்தியாசமான பல ஒர்க்அவுட் முறைகளும் ஜோடி ஃபிட்னஸ் கான்செப்ட்டில் இருக்கின்றன.

இவற்றின் சிறப்பு என்னவென்றால், அவை துணையுடன் செய்வதற்கு ஏற்றவை.

ஒவ்வொரு உடற்பயிற்சி முறைக்கும் வெவ்வேறு பலன்கள் இருக்கின்றன. மனைவியின் இடுப்புச் சுற்றளவைக் குறைக்க நினைக்கும் ஆண்கள், கணவரின் தொப்பையைக் குறைக்க விரும்பும் பெண்கள் என இருவரும் அவரவருக்கான உடற்பயிற்சி முறைகளைத் தேர்வுசெய்து ஜோடியாய்ச் செய்யலாம்.

தனியாகச் செய்யப்படும் உடற்பயிற்சி, நாளடைவில் அலுப்பை உண்டாக்கிவிடும். இதனால் பலரும் உடற்பயிற்சியை சில வாரங்களிலேயே கைவிடுகின்றனர். ஜோடியாகச் செய்யும்போது ஒரு கம்பானியன்ஷிப் உண்டாகிறது.

ஒருவர் சோர்வடையும்போது மற்றவர் ஊக்கப்படுத்த அது அலுப்பை நீக்குகிறது. அதுமட்டுமல்ல, யார் நன்றாக ஒர்க்அவுட் செய்கிறார் என்பதில் உற்சாகமான ஒரு போட்டியும் உருவாகிறது.

இதனால் குறுகிய காலத்திலேயே உடலில் எதிர்பார்க்கும் ஃபிட்னஸை எட்டமுடிகிறது. மேலும், மனநலமும் கூடுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button