கூந்தல் பராமரிப்பு

பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க முயன்று பாருங்கள்!…

எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும். தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும். அதிலும் குறிப்பாக, தலைமுடியைப் பொருத்தவரையில் பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்பது ஆண், பெண் இருவருக்குமே இருக்கக் கூடிய ஆசையாகத்தான் இருக்கிறது.

அதற்காக எவ்வளவு செலவளிக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு செலவழித்தாலும் இன்றைக்கு மார்க்கெட்டுகளில் கிடைக்கின்ற தலைமுடி பராமரிப்புப் பொருள்கள் முழுக்க நமக்குப் பிரச்சினையை அதிகப்படுத்துகிறதே தவிர குறைப்பதில்லை.

hair1

தலைமுடி

அவ்வளவு ஏன் முழுக்க முழுக்க ஆயுர்வேத புராடக்ட் என்று சொல்லி விற்கப்படுகிறவற்றில் கூட கெமிக்கல் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. தலைமுடி பராமரிப்பை பொருத்தவரையில் முடியை எவ்வளவு பராமரிக்கிறாமோ அதைவிடவும் அதனுடைய வேர்க்கால்களுக்குத் தான் அதிகமாகத் தேவைப்படுகின்றன. தலைமுடியின் வேர்க்கால்களைப் பராமரிப்பது மிகமிக அவசியம்.

வேர்க்கால்களும் சருமமும்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நம்முடைய முகம் மற்றும் சருமங்களில் ஏற்படுகுின்ற சில பிரச்சினைகளுக்கும் நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களுக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன. எப்போதும் குறையாத பருக்கள், கரும்புள்ளிகள் ஆகிய பல சருமப் பிரச்சினைகளுக்கும் காரணமே நம்முடைய தலைமுடியின் வேர்க்கால் பகுதி தான் என்று கூறப்படுகிறது. இறந்த செல்கள் அப்படியு தலையின் வேர்க்கால்களில் படிந்திருந்தால் இதன்மூலமும் பருக்கள் ஆகியவை உண்டாவது அதிகமாகிறது.

தலை அரிப்பு

தலையில் அரிப்பு ஏற்படும் பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த தலை அரிப்பதற்குக் காரணம் தலையின் வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்கள் தான். இதனாலேயே உங்களுடைய தலைமுடி பார்ப்பதற்கு ஆரோக்கியமற்றதாகவும் பொலிவில்லாமலும் இருக்கின்றன. அதனால் நீங்கள் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிக்கிற பொழுது, தலையின் வேர்க்கால்களை சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். சரி. எப்படி வேர்க்கால்களைப் பராமரிப்பது, சுத்தம் செய்வது? வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்களை எப்படி வெளியேற்றுவது? இதோ பாருங்கள். அதற்கும் மிக எளிய வழிகள் உண்டு.

ஷாம்புவில் சர்க்கரை

நம்முடைய முடியின் வேர்க்கால்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சின்ன விஷயத்தை தான். நீங்கள் பயன்படுத்துவது எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து தலையில் வேர்க்கால்களில் ஸ்கிரப் செய்யுங்கள். இப்படி சில நிமிடங்கள் ஸ்கிரப் செய்தால் தலையின் வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.

ஹேர் ஸ்கிரப்

பொதுவாகவே ஷாம்புவில் சிறிது சர்க்கரை சேர்த்தவுடன் அது நாம் முகத்தில் அப்ளை செய்யும் ஸ்கிரப்பைப் போன்று கொரகொரப்பாக மாறிவிடும். சிறிது நேரம் நன்கு ஸ்கிரப் செய்துவிட்டு தலைமுடியை அலசுங்கள். தலையில் உள்ள இறந்த செல்கள் யாவும் உதிர்ந்துவிடும்.

விலையுயர்ந்த பொருள்கள்

இவ்வளவு எளிமையாக வீட்டிலே உள்ள பொருள்களை வைத்தே மிக எளிமையாக தலைமுடியை பராமரிக்க முடியும் என்கின்ற பொழுது, இதற்கான ஏன் சிரமப்பட்டு விலையுயர்ந்த ஷாம்பு, ஹேர் ஸ்கிரப் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்? யோசிங்க. நாளைக்கே ஷாம்புல சர்க்கரை கலந்து தேய்க்க ஆரம்பிங்க.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button