சரும பராமரிப்பு

பலருக்கும் தெரியாத ரகசியம் இதோ! எண்ணெய் குளியலில் இவ்வளவு ஆபத்தா?…

பொதுவாகவே எண்ணெய் குளியல் எடுக்கும் போது குளியல் காலை 6.30 மணிக்குள் தொடங்கிவிட வேண்டும். லேசாக சூடான தண்ணீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். கடுமையான வெயிலில் வேலை செய்யவும் கூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம்மை சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த வளையம் கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டால் உடல்சூடு சீராகும், அழகு கூடும் சருமம் மென்மையாகும். ஐம்புலனும் நன்றாக இருக்கும். தலைமயிர் நன்கு வளரும். நல்ல குரல்வளம் கிடைக்கும். எலும்புகள் பலப்படும்.
பெண்கள் எண்ணெய் குளிக்க எடுக்க வேண்டிய நாட்கள்

ஞாயிறு குளித்தால் – வடிவமும் அழகும் போய்விடும்.
திங்கள் குளித்தால் – அதிக பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் – துன்பம் வரும்
புதன் குளித்தால் – புத்தி வந்திடும்
வியாழன் குளித்தால் – உயரறிவு போய்விடும்
வெள்ளி குளித்தால் – செல்வம் மிகும்.
சனி குளித்தால் – ஆயுள் அதிகமாகும்.

ஆண்கள் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டிய நாட்கள்

திங்கட்கிழமை தேய்த்து குளித்தால் முடக்கு வாதம்.
செவ்வாய் என்றால் முதுகுதொடர்பான பிரச்னை வரும்.
வியாழக்கிழமை குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிக் கிழமை குளித்தால் முடக்கு வாதம்.

ஆக எண்ணெய் குளியல் போட நினைப்பவர்கள் சனி, புதன் நாட்களில் குளிக்க வேண்டும் அதாவது ஆண்கள் சனி அல்லது புதன் கிழமையில் மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லது.

எண்ணெய் குளியலில் இத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளது என்பதை உணர்ந்து அதர்க்கேற்றவாறு குளித்தால் நல்லது.1518782688 2398

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button