சூப்பர் டிப்ஸ்! வெயில் காலத்திற்கு ஏற்ற பேஸ் பேக்

கோடை கால சரும பிரச்சனைகளான, வேர்க்குரு, முகப்பரு, சூடு கொப்பளம், தோல் கருத்துப்போதல் போன்றவைகளுக்கு இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்தை பாதுகாத்து நல்ல பயன் தரக்கூடியது

தேவையான பொருட்கள்

  • முல்தாணி மெட்டி -1 மேசைக்கரண்டி
  • கஸ்தூரி மஞ்சள் -1 மேசைக்கரண்டி
  • தயிர் -1 மேசைக்கரண்டி

தயாரிக்கும் முறை
பாத்திரத்தில் முல்தாணி மெட்டி,கஸ்தூரி மஞ்சள், தயிர்
சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும். பேஸ்ட் கொஞ்சம் கட்டியாக இருந்தால் மீண்டும் தயிர் சேர்த்து கொள்ளவும்.

உபயோகப்படுத்தும் முறை
முகத்தில் தடவுவதற்கு முன்னாடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளவும்.

பின்பு பஞ்சு ஒன்றில் ரோஸ் வோட்டர் போட்டு முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலாக துடைத்து கொள்ளவும்.

பிறகு செய்து வைத்திருக்கும் பேஸ் பேக்கை முகத்திலும் கழுத்திலும் நன்கு தடவி கொள்ளவும்.

20 நிமிடங்கள் வைத்து குளிந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் பூசி வர சருமத்தை பாதுகாத்து நல்ல பயன் தரும்.

Leave a Reply