மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.
கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?
தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.t day to conceive How to calculate the ovulation day SECVPF.

பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

இந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.

பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுப்படும்.

உதாரணமாக,

உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.

கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.

உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.

28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 14-ம் நாள் கருமுட்டை வரும்

30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 16-ம் நாள் கருமுட்டை வரும்

34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 20-ம் நாள் கருமுட்டை வரும்

இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.pergnanccy tips. LSource:maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button