முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இயற்கையாக தயாரிக்கப்பட்ட டே கிரீம் முகப்பரு வராமல் தடுக்க எப்படி உதவுகிறது?

முகப்பருவை சமாளித்து, சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் சரியான பொருளை தேர்வு செய்வது அவசியமாகும். சரும பராமரிப்பு தொடர்பாக, ஏராளமான பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால், உங்களுக்கு உகந்த பொருளை தேர்வு செய்ய வேண்டுமெனில், ஒரே ஒரு தாரக மந்திரம்தான் உள்ளது. அது, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது.

ஏன்?

முகப்பரு உள்ள சருமம் எனில், பாக்டீரியாவை அண்டவிடாமல் செய்யும் பொருட்கள்தான் கட்டாயம் தேவை. இதன்மூலமாக, பரு வீக்கம் குறைந்து, சருமத்தை பாதுகாக்க முடியும். பகல் நேரத்தில், சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்கள், மாசு, மன அழுத்தம் மற்றும் மேக்அப் உள்ளிட்ட காரணிகளால், நமது சருமம் பாதிக்கப்பட நேரிடலாம். எனவே, பகல் நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையிலான க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவது, நம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய முதன்மை வழியாகும்.5166a25897a62efa9b12

இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு டே லோஷன் அல்லது கிரீம் நமக்கு நல்ல பயன் தரும். பெரும்பாலான சரும பராமரிப்பு விசயம், நாம் தேர்வு செய்யக்கூடிய இயற்கை முறையில் தயாரான மற்றும் ஆர்கானிக் பொருட்களில்தான் அமைந்துள்ளது. தவறான பொருட்களை தேர்வு செய்யும்போது, நமது சருமம் வீக்கம், வறட்சி மற்றும் வெடிப்புகளை சந்திக்க நேரிடலாம். மரபு ரீதியான முகப்பரு நீக்க சிகிச்சைகள் விலை அதிகம் என்பதுடன், சில நேரங்களில், நமக்கு வறட்சி, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற ஒவ்வாமை சீரழிவுகளையும் ஏற்படுத்திவிடும் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இதனை சமாளிக்க, டே கிரீம் போன்ற ஒன்றுதான் சரியான தீர்வாக அமையும்.

டே கிரீம்கள் எப்படி செயல்படுகின்றன?

டே கிரீம்கள் என்பவை, மாசு அல்லது சருமம் மீதான அக்கறையின்மை போன்ற பிரச்னைகளை சமாளித்து, நமது சருமத்தை முறையாக பாதுகாத்து, பராமரிக்க உதவுகின்றன. கற்றாழை போன்ற இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கிரீம், சருமத்திற்கு தேவையான போஷாக்கு அளித்து, நமது சருமத்தை தட்பவெட்ப மாற்றம், வெளிப்புற மாசு காரணிகளிடம் இருந்து எளிதாக பாதுகாக்க உதவுகிறது. கற்றாழை சருமத்தின் ஈர தேவையை பூர்த்தி செய்து, போதுமான மென்மை, பாதுகாப்பை வழங்குகிறது. எளிதில் ஒட்டாத, லேசான எடையுள்ள கற்றாழை கிரீம், சருமத்தை பாதுகாக்க ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். சரும எரிச்சல் மற்றும் முகப்பரு ஏற்படுத்தக்கூடிய மற்ற காரணிகளை தடுக்கவும், கற்றாழை கிரீம் நமக்கு உதவுகிறது.

இது மட்டுமின்றி, பகல் நேரத்தில் நமது சருமம் எந்நேரமும் வெயில் கூடவே தொடர்பில் இருக்க நேரிடுவதால், நீங்கள் பயன்படுத்தும் டே கிரீமில், எஸ்பிஎஃப் உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். பாதுகாப்பின்றி, அதீத அளவில் நேரடி சூரிய ஒளியில் நடமாடுவதால், தோல் சிவத்தல், வீக்கம், முகத்தில் முதிர்ச்சி, பொலிவின்மை, வறட்சி மற்றும் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த நேரிடும்.

நீங்கள் சரியான டே கிரீமை தேர்வு செய்யவில்லை எனில் என்ன நடக்கும்?
டே கிரீம் போன்ற எதிலும் ஒட்டாத ஒன்றை நாள் முழுக்க நீங்கள் பயன்படுத்துவதால், உங்களது சருமம் மீது தூசி மற்றும் மாசுகள் படிய வாய்ப்பில்லை. காஸ்மெட்டிக்ஸ் பொருட்களின்கீழ், டே கிரீம்கள் சேராது. காரணம், இவற்றின் தயாரிப்பு கலவையில் அதிக கிரீஸ் பொருட்களை கொண்டிருக்காது. இதனால், சருமத்தின் சுவாச துளைகளுக்கு எந்த பாதிப்பும் நேரிடாது. இந்த சுவாச துளைகளை அடைக்கும்போதுதான் பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது. மருக்கள், பருக்கள், தோல் சிவத்தல் மற்றும் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள்தான் அவை. உங்களது சருமத்தின் துளைகள் எண்ணெய் மற்றும் இறந்த தோல் செல்களால் அடைக்கப்படுவதால், முகப்பரு உண்டாக தொடங்குகிறது. இதை முதலிலேயே தவிர்ப்பதுதான் மிக நல்லது. சருமம் மீது ஒட்டாமல் எளிதில் பாதுகாப்பதாக உள்ள கிரீம்தான் நமக்கு உகந்த ஒன்றாகும்.

டே கிரீம் தவிர, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமாகும். உங்களது உணவில் கட்டாயம், இயற்கையான பொருட்களை சேர்த்துக் கொள்வது நலம். நல்ல கொழுப்புகள், கீரைகள், காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இதன் பலன், சருமத்தில் எதிரொலிக்கும்! நிறைய நீர் குடிப்பது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதுடன், சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவுகிறது. காஃபி உள்ளிட்டவற்றை அதிகம் குடிக்காமல் இருப்பது இன்னும் நல்ல பலன் தரக்கூடும்.a248fc2b710fe196981

இன்னொரு விசயம், முகப்பரு உள்ளிட்ட பலவித பிரச்னைகளால் தழும்பு ஏற்படும் சருமத்தை சரிசெய்வதற்கு, எந்த தீர்வும் உண்மையில் இல்லை. அனைத்து பொருட்களுமே, அனைவருக்கும் உரிய பலனை தருவதில்லை. அதனால், எப்போதும் இயற்கையான மூலப்பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தி, நல்ல ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை பெற முயற்சிப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button