மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! தினமும் நைட் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா?

தினமும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பது பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான பயனுள்ள பதிவு தான் இது.

நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்

அசிடிட்டி உருவாக்கும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம்.

ஊட்டச்சத்துக்கள்

கிராம்பில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. ஒரு ஸ்பூன் (2 கிராம்) மொத்தம் 21 கலோரிகள் இருக்கின்றன. அதில் 1 கிராம் கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராம் நார்ச்சத்தும் இருக்கின்றன. 30 சதவீதம் மாங்கனீசும் 4 சதவீதம் வைட்டமின் கே மற்றும் 3 சதவீதம் வைட்டமின் சியும் நிறைந்திருக்கிறது.

காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் மது அருந்துவது போன்றவற்றால் அசிடிட்டி ஏற்படும்.

பித்தநீர் உங்கள் உணவு குழாயில் பாய்கின்ற எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும். மோசமான வலிகளுக்கு நிவாரணம் இருப்பினும் சில இயற்கை பொருட்களான துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் மற்றும் கிராம்பு உள்ளிட்டவை உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த அருமையான இயற்கை வைத்திய பட்டியலில், கிராம்பு தான் (லவங்கம்) முதலிடம் வகிக்கிறது.
என்ன நடக்கிறது?

நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதிக்கு செல்கிறது. வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் உணவை ஜீரணிக்க தேவையான அமிலத்தை/ அசிடிட்டியை உருவாக்குகின்றன. இரைப்பை செரிமானத்திற்குத் தேவையானதை விட அதிகமான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நிலை இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் அடிக்கடி எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

அறிகுறிகள்

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது வயிற்றுப் பொருமல் என்பதைப் புரிந்து கொண்டு, உடனே 2 கிராம்பை எடுத்து வாயில போட்டுக்கோங்க. அந்த அறிகுறிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு
தொண்டை மற்றும் இதயத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வு
கெட்ட சுவாசம்
அஜீரணம்
வாயில் நீடித்த புளிப்பு சுவை
குமட்டல்
ஓய்வின்மை
மலச்சிக்கல்

நீங்கள் அசிடிட்டியால் பாதிக்கப்படும்போது படுக்காதீர்கள். படுத்தால் பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும்.
கிராம்பு எப்படி?

“கிராம்புகள் நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது. உணவுடன் சேர்க்கும்போது, ​​அவை அமிலத் தன்மையை தடுக்க உதவுகின்றன. அசிடிட்டி என்கிற வயிற்றுப் பொருமல் வராமல் தடுக்க கிராம்பு மற்றும் ஏலக்காய் சமமான அளவு கலந்து கொள்ளுங்கள். இது அசிடிட்டியை தடுக்கவும் வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது.

கிராம்புகள் உமிழ்நீர் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. கிராம்பை மெல்வது சித்த அல்லது ஆயுர்வேத சிகிச்சையாக பரிந்துரைக்கபடுகிறது.

கிராம்பை எப்படி பயன்படுத்தணும்?

மூன்று கிராம்புகளை மெல்வதால் வெளிவரும் ஜூஸ் உங்களுக்கு அசிடிட்டியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். நொறுக்கிய கிராம்புகளை ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது அசிடிட்டியை போக்காவிட்டாலும் கெட்ட வாடையை போக்கும்.

எந்தவொரு வயிறு பிரச்சனையும் தவிர்க்க, நம் தினசரி உணவுகளில் கிராம்புகளை சேர்ப்பது நல்லது.

தினமும் இரவில் இரண்டு தீவிர மற்றும் நீண்ட கால அசிடிட்டி என்னும் வயிற்றுப் பொருமல் பிரச்சனைக்கு கிராம்பு சிறந்த தீர்வாக இருக்கும்.cc0427d6d7cb77028b981

Source: tamilboldsky

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button