அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! ஆபீசில் உங்களது தோற்றத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய முறைகள்

நமது வேலை நம்மை பற்றி உயர்வாக சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவோம். நமது தோற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் நாம் தன்னம்பிக்கையடைய முடியும். அந்த தன்னம்பிக்கை ஆபீசில் நமது வேலைத்திறனையும் அதிகரிக்கும். நாம் நன்றாக தோற்றமளிப்பதாக நமது மனதுக்கு தோன்றினாலே அது நமது தோற்றத்துக்கு மெருகு சேர்க்கும். மிடுக்கான மற்றும் அழகான தோற்றம் இருந்தால் தான் நம்மை ஒரு புரோஃபெஷனல் ஆக மற்றவர்கள் ஏற்றுக் கொள்வர். நாம் அணியும் உடைகளை வைத்தே மற்றவர்கள் நம்மை எடை போடுவர். அதுவும் கார்பரேட் உலகில் முதல் சந்திப்பிலேயே நம்மை பற்றிய ஒரு நல்லெண்ணத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டியது சில நேரங்களில் அவசியமாகிறது. சிறப்பாக தோற்றமளிப்பது என்பது ஒரு பெர்சனல் பிராண்டிங் ஆகும்.

ஆபீசில் உங்களது தோற்றத்தை மேம்படுத்த 5 எளிமையான வழிகள் இதோ:

கிளாசிக்கான எந்த காலத்துக்கும் பொருத்தமான ஸ்டைலில் கவனம் செலுத்துங்கள்

காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது ஒவ்வொரு நாளும் தனித்துவமான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்வதற்கு நேரம் இருப்பதில்லை. அதற்கு சரியான தீர்வு உங்களது உடைகளுக்கான அலமாரியில் எப்போது கிளாசிக்கான மற்றும் எந்த காலத்திலும் ஸ்டைலான தோற்றமளிக்கும் ஆடைகளை கைவசம் வைத்திருப்பது தான். பிளேசர்கள், நன்றாக ஃபிட் ஆகும் பேண்ட்ஸ், பென்சில் ஸ்கர்ட்ஸ் இவற்றை வசதியான ஆபீஸ் ஷூக்களுடன் மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து தினமும் ஸ்மார்ட் லுக்குடன் வேலைக்கு செல்லலாம். கிளாசிக்கான ஒரு வெள்ளை ஷர்ட், கருப்பு பேண்ட் அல்லது ஸ்கர்ட் மற்றும் வரிகள் கொண்ட பிளேசர்ஸ் ஆகியவற்றுடன் நன்றாக மேட்ச் ஆவதுடன் அது எப்போதும் உங்களது தோற்றத்துக்கு கச்சிதமாக பொருந்தும்.MIMAGEc0c917530624701b9026630c204a1d3b

சுத்தமான லுக்கை எப்போது குறிக்கோளாக கொள்ளுங்கள்

சருமம் வறண்டு தோலுரிந்தோ அல்லது அதிக எண்ணெய் பசை கொண்ட முகம் உங்களை நீங்கள் சரியாக பராமரித்து கொள்ளாததை காட்டும். அது உங்களது தன்னம்பிக்கையையும் அசைத்து விடும். நல்லதொரு 9 to 5 டே கிரீம் இல் முதலீடு செய்யுங்கள். அது உங்களது சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், சருமத்திலுள்ள எண்ணெய் பசையையும் பேலன்ஸ் செய்து மேட் ஃபினிஷ் தரும். இயற்கை உட்பொருட்களான கற்றாழை போன்றவற்றை கொண்ட பிராடக்டுகளை தேர்ந்தெடுங்கள். அவை கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக்ஸ் தரும் நீடித்த சரும பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. முறையாக பராமரிக்கப்படாத மற்றும் அழுக்கான கைகள் மற்றும் நகங்கள் ஆகியவையும் உங்களை பற்றிய நன்மதிப்பை கெடுத்து விடும். முறையாக வெட்டப்பட்டு சுத்தமாக தோற்றமளிக்கும் நகங்கள் நன்மதிப்பினை பெற்றுத்தரும். நல்ல தரமான நெயில் டிரிம்மர்கள் மற்றும் நெயில் ஃபைல் ஐ உபயோகியுங்கள். உங்களது நகங்களை பெயிண்ட் செய்ய நினைத்தால் நியூட் மற்றும் ட்ரான்ஸ்பரென்ட் கலர்களே அதற்கு சரியான தீர்வுகளாகும். பழைய நெயில் பாலிஷ் அங்கங்கு ஒட்டிக்கொண்டிருந்தால் அதனை முதலில் நகத்திலிருந்து சுத்தமாக நீக்கி விட்டு வாரம் ஒரு முறைஃப்ரெஷான கோட்டிங் பூசுங்கள்.MIMAGE427ed0bb52893ab1a733b5b9f6f9483a

உங்களது கூந்தலில் கவனம் செலுத்துங்கள்

பியூட்டி பார்லருக்கு தினமும் சென்று உங்களது கூந்தலை அலகரிக்கத் தேவையில்லை! உங்களுக்கு சிறப்பான தோற்றமளிக்கும் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுத்து அதனை செய்து கொள்ளுங்கள். எளிமையான, நீட்டான தோற்றமளிக்கும் கொண்டை பார்க்க அழகாக இருக்கும். முடியை அடிக்கடி டிரிம் செய்வதால் கூந்தல் ஆரோக்கியமாக தோற்றமளிப்பதுடன் உங்களை நீங்கள் நன்றாக பராமரித்து கொள்வதையும் மற்றவருக்கும் உணர்த்தும்!

ஆக்ஸசரீக்கள் தோற்றத்தை மேம்படுத்தவோ பாதிக்கவோ கூடும்

பெர்சனல் ஸ்டைலை பொருத்த வரையில், ஆக்ஸசரீக்கள் உங்களது பெர்சனாலிட்டியை வெளிப்படுத்தும். .உங்களது உடைகள் அனைத்துடனும் நன்றாக பொருந்தக்கூடிய நல்லதொரு ஆபீஸ் பேக்கில் நீங்கள் முதலீடு செய்வது அவசியம். அது உங்கள் தோற்றத்துக்கு மேலும் மெருகு சேர்க்கும். அதிக பளபளப்பு இல்லாத ஸ்டைலிஷான வாட்ச் உங்களது ஆடையின் மிடுக்கினை மேலும் கூட்டும். பார்க்க அழகான அதே நேரத்தில் அணிவதற்கு சௌகர்யமான ஷூகளை பயன்படுத்துங்கள். மீட்டிங்குக்காக நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நடக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உங்களது அழகான காலணி வலி மிகுந்த ஒன்றாக மாறிவிடக்கூடாது இல்லையா! குறைவான ஹீல் மிடுக்கான தோற்றத்தை தரும். உங்களுக்கு மேலும் கச்சிதமான தோற்றம் தர சில அழகான நெக்லஸ் அல்லது காதணிகளை அணியலாம். மற்றபடி உங்களது தோற்றத்தை சிம்பிளாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது நறுமணத்தை கண்டுபிடியுங்கள்

தோற்றம் என்பது லுக்ஸ் உடன் மட்டுமே தொடர்புடையதல்ல. உங்களிடமிருந்து வரும் நறுமணமும் அதில் அடங்கும். ஆபீசில் அது உங்களுக்கு ஒரு நன்மதிப்பையும் தரும். உங்களுக்கு பொருத்தமான ஒரு ஃப்ரேக்ரன்சை தேர்ந்தெடுங்கள் மற்றும் அது காலை மற்றும் மதிய நேரத்தில் அணிவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். மிகவும் அதிக வாசனையையும் அது தரக்கூடாது, அதே நேரத்தில் அது உங்களுக்கு ஒரு தனித்துவமான ஸ்டேட்மெண்டை தர வேண்டும். ஒரே வகை பிராடக்டுகளை அதன் மேல் பயன்படுத்துவதன் மூலம் நறுமணம் நீடித்திருக்க செய்யலாம். பாடி வாஷ், பாடி லோஷன் மற்றும் பெர்ஃப்யூம் என அனைத்தும் ஒரே வாசனையை கொண்டதாக இருந்தால் அந்த நறுமணம் நாள் முழுவதும் உங்கள் மேல் நிறைந்திருக்கும்.

ஆபீசில் நல்ல தோற்றத்துடனும் தன்னம்பிக்கையுடனும் நீங்கள் வலம் வர இந்த எளிய குறிப்புகளை மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button