ஆரோக்கியம் குறிப்புகள்

இவற்றை எல்லாம் ஒரு போதும் அடக்கி விடாதீர்கள்!….

நாம் அன்றாடம் செய்ய கூடிய சில விஷயங்கள் நம்மை பல்வேறு முறையில் பாதிக்கின்றன. இவற்றில் சில செயல்களை நாம் தெரியாமலே செய்து வருகின்றோம்; சில செயல்களை தெரிந்தே செய்து வருகின்றோம். இவ்வாறு செய்வதால் உடல் ஆரோக்கியம் நேரடியாக பாதிக்கப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன.

தும்பும் போது மூக்கை அடைக்கும் முறை முதல் தலையணையில் குப்பற தூங்கும் முறை வரை நம்மை பாதிக்க செய்கின்றன. தினமும் செய்கின்ற இது போன்ற செயல்கள் எப்படியெல்லாம் நமது ஆபத்தை உண்டாக்குகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீர்

நம்மில் பலருக்கு இந்த பழக்கம் உண்டு. அதாவது, சிறுநீர் வரும்போது அதை அடைத்து கொண்டு சற்று நேரம் தாமதமாக போவதால் பெருங்குடல் மற்றும் சிறுநீர் பாதை பாதிக்கப்படுமாம். மேலும் இதனால் நோய் தொற்றுகளும், மலச்சிக்கல் போன்ற அபாயங்களும் உண்டாகும்.

urine

குப்பற படுத்தல்

தூங்கும் போது குப்பற தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இவ்வாறு தூங்க கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தூங்குவதால் சுவாச கோளாறுகள், இரத்த ஓட்டம் தடைபடுதல், கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும், மிக விரைவாக முக சுருக்கங்களை தந்து வயதான தோற்றத்தையும் தர கூடும்.

வெந்நீர்

பொதுவாக தலைக்கு குளிக்கும் போது வெந்நீரில் குளிப்பது வழக்கம். ஆனால், இவ்வாறு குளிப்பதால் ஏராளமான அபாயங்கள் உண்டாகுமாம். குறிப்பாக மூளையின் நாளங்கள் பாதிக்கப்பட்டு தலைவலியை ஏற்படுத்தும். அத்துடன் தலை பகுதியை அசுத்தமாக மாற்ற கூடும்.

கைபேசி

நம்மில் பலருக்கும் கைபேசியை கழிவறைக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் பழக்கம் உண்டு. கழிவறையில் 5 நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்தாலே நிச்சயம் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.

மேலும், இதனால் கழிவறையில் உள்ள நுண் கிருமிகளும் நம் மீது ஒட்டி கொண்டு உடல்நல கோளாறுகளை உண்டாக்கும்.

கைகள்

முகத்திலோ அல்லது கண்களில் ஏதேனும் எரிச்சல் உண்டாகினால் நிச்சயம் நாம் கைகளை கொண்டு தான் அந்த எரிச்சலை ஆற்றி கொள்வோம்.
இது போன்று செய்வதால் கைகளில் இருக்க கூடிய கிருமிகள் முகத்தை பாதிக்கும். இதனால் நோய் தொற்றுகள், முகப்பருக்கள், அரிப்பு போன்ற ஏராளமான ஆபத்துகள் ஏற்படும்.

இரத்தம் வடிதல்

தவறுதலாக கையையோ அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அறுத்து கொண்டால் உடனடியாக அங்கு வரும் இரத்தத்தை நாம் உறிஞ்சி விடுவோம். ஆனால், இவ்வாறு செய்வது தவறு என தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இவ்வாறு செய்வதால், வாயில் உள்ள நுண் கிருமிகள் பல்வேறு பாதிப்புகளை உங்களுக்கும் அவருக்கும் ஏற்படுத்த கூடும்.

பற்கள்

கையில் இருக்கும் பொருட்களை அப்படியே வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?! அப்போ உங்களுக்கு சிலபல பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு செய்வதால் பற்களின் ஈறுகள் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.

தும்பல்

தும்பல் வரும்போது அதை அணை போட்டு தடுத்து விடாதீர்கள். இதனால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும். மூக்கில் இருந்து கிருமிகளை வெளியேற்றவே தும்பல் வருகிறது.

இதை நாம் தடுக்கும் போது அந்த கிருமிகள் மூக்கிலே ஒட்டி கொள்ளும். மேலும் இதனால் உணவு குழாய், காது கேட்கும் திறன், மன நிலை போன்றவை பாதிக்கப்படும்.

சுவிங்கம்

சுவிங்கம் மெல்லும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனால் பாதிப்புகள் அதிக அளவில் உண்டாகும். முக்கியமாக பற்கள் நேரடியாக தாக்கப்படும். மேலும் மூளையின் செயல்திறனை பாதித்து ஞாபக மறதியை ஏற்படுத்தும்.

இனி மேற்சொன்ன செயல்களை தவிர்ப்பதே நல்லது. இல்லையேல் பல்வேறு அபாயங்கள் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.

source: boldsky.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button