முகப் பராமரிப்பு

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

20 வயது இளம் பெண்கள் முதல் 40 வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை முகத்தில் உள்ள தோல் சுருங்குதல், கருவளையம் ஏற்படுத்தல், கரும்புள்ளி தொன்றுதல். இவை முக அழகை கெடுப்பதுடன் முதியவர் போன்ற தோற்றத்தையும் தந்து விடுகிறது.

எவ்வளவு வயதானாலும் இளமையுடன் மிளிரும் முகத்தை பெறவே அனைவரும் விரும்புவர். முகத்தில் உள்ள தோல் சுருங்குவதற்கு போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காதது, தினசரி உடற்பயிற்சி செய்யாமை, இயற்கையான பொருட்களில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, புகை‍, மது போன்ற தீயபழக்கங்கள், மன அழுத்தம், போதுமான நேரம் தூக்கம் இல்லாதது என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

face2

20 வயதுடைய பெண்களுக்கு:

வெயிலில் செல்வதற்கு முன்னர் சூரியக்கதிரால் முகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்ககூடிய சன் கிரீம்களை பூசுவதன் மூலம் நல்ல தீர்வைப் பெற முடியும். நமது உடலில் இருக்கும் தோலைவிட முகத்தில் இருக்கும் தோல் மிருதுவானது, எனவே முகத்தை சருமத்திற்கு, பயன்படுத்தும் சோப்பு கொண்டு கழுவக்கூடாது, மாறாக முகத்திற்கு கேடு விளைவிக்காத மிருதுவான ஃபேஸ் வாஷால் ஒரு நாளைக்கு இருமுறை முகத்தை மெதுவாக மேல் நோக்கி தேய்த்தல் முறையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

20 வயது பெண்ணுக்கு கெமிக்கல் பீல்:

முகச்சருமத்தில் இருக்கும் அழுக்கினை சுத்தம் செய்ய கெமிக்கல் பீல் முறையை பயன்படுத்தலாம். முகத்தில் இத்தகைய பீலை அப்லை செய்து, அதனை உரித்தெடுக்கும்போது, முகத்தின் ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், முகமும் நல்ல பளப்பளப்புடன் மின்னும். பொதுவாக 20 வயதுள்ள இளம் பெண்கள் இந்த கெமிக்கல் பீலை சிரான இடைவெளியில் பயன்படுத்துவதன் மூலம் எப்போதும் மாறா இளமை முகத்தை பெற முடியும்.

30 வயது பெண்ணுக்கு லேசர் மருத்துவம்.:

30 வயதுகளை தொட்ட பெண்கள் லேசர் மருத்துவம் செய்வதன் மூலம், முகத்தில் நல்ல ரத்த ஓட்டத்தை பெறலாம். இதனால் தோல் சுருக்கம் ஏற்படுவதை தடிக்கலாம், மேலும் அஃகுவா கோல்ட் எனப்படும் மருத்துவத்தையும் எடுத்துக் கொள்ளலாம். மைக்ரோ ஊசிகளின் மூலம் கரும்புள்ளி, தோலில் ஏற்பட்டுள்ள தேம்பல் போன்றவற்றை போக்க முடியும்.

40 வயதுள்ள பெண்கள்:

40 வயதுகளை தொட்ட பெண்கள் பிஆர்பி ஊசி போட்டு கொள்வதன் மூலம் தோலின் மேல் ஏற்பட்டுள்ள சுருக்கங்களை போக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.மேலும் தோலின் நலனை பாதுகாக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலமும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் வாயிலாகவும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button