தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்க மருதாணி மட்டும் போதும்!….

எல்லாருக்கும் வலிமையான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலுக்கு என நிறைய மெனக்கெடல்களை செய்வார்கள். கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

தினமும் சாம்பு போட்டு அலசுவது, எண்ணெய் தடவுவது இது மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் கூந்தல் நன்றாக வளர கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. அதற்கு மருதாணி மட்டும் நம் கையில் இருந்தால் போதும்.

இந்த மருதாணி எண்ணெய்யை தலையில் தடவி வந்தால் கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

marathani

காயங்கள் ஆற்ற

மருதாணிக்கு தலையில் ஏற்படும் தொற்றை போக்கும் தன்மை உள்ளது. இது அழற்சியை எதிர்த்து போரிடும். அதே மாதிரி தீப்பட்ட புண், காயங்கள் போன்றவற்றின் மேல் போட்டால் கட சீக்கிரம் ஆறி விடும்.

இது வெளியே இருந்து வரும் கிருமிகளை தடுத்து சீக்கிரம் காயங்கள் ஆற உதவுகிறது. இயற்கையாகவே குளிர்ந்த தன்மையை சருமத்திற்கு தருகிறது.

காய்ச்சலை  குறைத்தல்

ஹென்னா காய்ச்சலை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே அதிகமான காய்ச்சல் இருக்கும் போது இந்த மருதாணி இலைகளால் பற்று போட்டால் காய்ச்சல் குறைந்து விடும்.

இதற்கு காரணம் அதன் குளிர்ந்த தன்மை தான். வியர்வை மூலமாகவும் காய்ச்சலை குறைத்து விடும்.

தலைவலி

மருதாணி சாறு தலைவலிக்கு மிகவும் பயன்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைவலியை குறைக்கிறது.

அழற்சி எதிர்ப்பு தன்மை

இந்த மருதாணி எண்ணெய் ஆர்த்ரிடிக் மற்றும் நுமேட்டிக் வலிகளுக்கு உதவுகிறது. வயதாகும் போது மூட்டுப் பகுதியில் ஏற்படும் தேய்மானம், அழற்சி போன்றவற்றை இந்த ஆயில் கொண்டு சரி செய்யலாம்.

பாதிக்கப்பட்ட வலி மிகுந்த பகுதிகளில் இந்த எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயதாகுவதை தடுத்தல்

ஹென்னா ஆயிலில் அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் உள்ளது. இது வயதாகும் போது ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள், பருக்கள் போன்றவற்றை போக்கி நம்மை இளமையாக வைக்கிறது.

இதன் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை சருமத்தை பாதுகாக்கிறது.

தூக்க பிரச்சினைகள்

ஹென்னா ஆயில் தூக்க பிரச்சினை, இன்ஸோமினியா, நாள்பட்ட தூக்க வியாதிகள் போன்றவற்றை சரி செய்கிறது.

இது நமது மூளையை ரிலாக்ஸ் செய்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்

சில மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடியுங்கள்.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.

கூந்தல் ஆரோக்கியம்

ஹென்னா கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று என்பதால் ஹேர் டை, ஹேர் கலர் போன்றவற்றில் பெரிதும் பயன்படுகிறது. இது மயிர்கால்களுக்கு நல்ல வலிமை தந்து கூந்தலை வலிமையாக்குகிறது.

ஹென்னா ஆயில், தயிர் இரண்டையும் கலந்து முடியில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

நகங்கள்

நகங்களை அழகாக வைக்கவும் மருதாணி பெரிதும் உதவுகிறது. நகங்களில் உள்ள பாக்டீரியா தொற்று, அழற்சி போன்றவற்றை சரி செய்கிறது.

மருதாணி இலை போட்ட தண்ணீரை குடித்து வந்தாலே போதும் நகங்களில் உள்ள கீறல்கள், அழற்சி போன்றவற்றை குறைக்கிறது. இது நகங்களில் ஏற்படும் அரிப்பு, வலி மற்றும் தொற்று போன்றவற்றை சரி செய்கிறது.

இரத்த அழுத்தம்

மருதாணி இலை போட்ட தண்ணீர் அல்லது அதன் விதைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.

இது ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் போன்றவைகள் வராமல் தடுக்கிறது.

ஹேர் ஆயில் வீட்டில் தயாரிப்பது எப்படி

தேவையான பொருள்கள்

ஹென்னா இலைகள்
500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்

தயாரிக்கும் முறை

ஹென்னா இலைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

எனவே அதிகளவு தண்ணீர் ஊற்ற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றினாலே போதும்.

நெல்லிக்காய் வடிவில் அரைத்த பேஸ்ட்டை உருட்டிக் கொள்ளுங்கள். அதை நன்றாக காய வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்

இப்பொழுது ஹென்னா பேஸ்ட் பந்துகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைக்கவும்
இப்பொழுது எண்ணெய்யை நன்றாக கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது எண்ணெய் ப்ரவுன் நிறத்தில் மாற ஆரம்பித்து விடும்.

பிறகு ஒரு நாள் முழுவதும் நன்றாக ஆற விடுங்கள்

பிறகு அதை வடிகட்டி காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்

இப்பொழுது ஹென்னா ஹேர் ஆயில் ரெடி.

அப்படியே இந்த எண்ணெய்யை உங்கள் தலையில் தடவி வந்தால் நீண்ட கருகருவென கூந்தலை பெறலாம். கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் மறைந்தே போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button