ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கிய உணவு

இதெல்லாம் தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் சாப்பிட்டுறாதீங்க!…

கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது.

கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம்.

தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் வயிற்றில் உண்ண கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

affect

காபி & டீ

நம்மில் அதிகமானோர் காபி மற்றும் டீ குடிப்பதில் மிகவும் மும்முரமாக இருப்பதுண்டு. எப்படி போதைக்கு அடிமையாக இருக்கிறோமோ, அது போல காபி மற்றும் டீ குடிப்பதற்கும் அடிமையாகி இருக்கிறோம்.

காபி என்பது மிகவும் ஆபத்தான பானம் என்றே கூறலாம். இதனால் நாம் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதால், அதில் உள்ள காப்பைன் நமது உடலில் பல தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதுமே தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும்.

தயிர்

தயிர் நமது உடல்நலத்திற்கு சிறந்தது தான். தயிரில் எவ்வளவு தான், பல நல்ல பாகாடீரியாக்கள் இருந்தாலும், இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அந்த பாகாடீரியாக்கள் நமது வயிற்று படலத்துடன் இணைந்து, வயிற்று உப்பிசத்தை ஏற்படுத்துகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நாம் காலையில், வெறும் வயிற்றில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வாழைப்பழத்தில், அதிகமான மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இந்த மக்னீசியம் சத்துக்கள் நமது உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மாக்னீசியத்தில் ஏற்ற தாழ்வுகளை உண்டுபண்ணுகிறது.

தக்காளி

தாக்காளியை எப்போதுமே வரும் வயிற்றில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், தக்காளியில் உள்ள ஆசிட் அமிலம் இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால், கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்கள் உருவாக்குவதற்கு கூட வலி வகுக்கிறது.

மாத்திரைகள்

நம்மில் அதிகமானோர் இன்று மாத்திரைகளை உணவு போல உட்கொண்டு வருகிறோம். மாத்திரைகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு உடலில் மேலும் பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்குகிறது.

ஆல்கஹால்

நம்மில் பலருக்கு இன்று உணவாக அமைவதே இந்த ஆல்கஹால்கள் தான். பொதுவாகவே ஆல்கஹால் ஆரோக்கியமற்றது தான். காலியில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்று படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தி, வயிற்றுப்படலாம் அரிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button