ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கிய உணவு

பாதம் தொடர்பான உபாதைகள் குணமாக ஊதா அரிசி!…

சீனாவில் அதிகமாக பயன்படுத்தபடும் கருப்பு நிற அரிசியே, ஊதா அரிசியாகும். இந்த அரிசியில் உள்ள நன்மைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ள தென் சீன வேளாண் பல்கலைக்கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஊதா அரிசியினை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய பயன்களை பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு.

அரிசி சாப்பிட்டால் உடல் பருமன் கூடும் என்றுதான் நம்மில் பலருக்கு தெரியும், ஆனால் இந்த ஊதா அரிசியில் அதிக அளவில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை குறைப்பற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

arusi

ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இந்த அரிசிகுறைக்கிறதாம்.

ஊதா அரிசியில் உள்ளநார்ச்சத்துக்கள், வயிறு சம்மந்தமான அனைத்து உபாதைகள் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

இந்த அரிசியின் கஞ்சியை கொண்டு, பாதங்களை கழுவி வரும்பொழுது, விரைவிலேயே பாதம் தொடர்பான உபாதைகள் குணமாகும்.

ஊதாஅரிசியில், உயிர்ச்சத்து “இ” அதிக அளவில் இருப்பதால், தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் கண், தோல் போன்றவற்றுக்கும் நல்ல பாதுகாப்பு கொடுக்கிறது.

ஊதா அரிசியை உணவில் அடிக்கடி சேர்த்து வர ஆஸ்துமா தொந்தரவு விரைவிலேயே குணமாவதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்திற்கான மருந்தாகவும் இந்த அரிசி செயல்படுகிறது.

மூளையின் ஆற்றலை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உடலையும், மனதையும் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறதாம் இந்த அரிசி.
உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் ஊதா அரிசியின் மிகப்பெரிய பயனாக ஆய்வாளர்கள் சொல்வது, இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் புற்றுநோயிலிருந்து விடுபட முடியுமாம்.

மிகவும் சுவைமிக்க‌ ஊதா அரிசியினை கொண்டு இனிப்பு வகைகள், சாதம், தோசை, அடை, என நமக்கு பிடித்த மாதிரியான உணவு வகைகளை சமைத்து உட்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button