25.3 C
Chennai
Friday, Dec 27, 2024
kattalai1
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாற இதை செய்யுங்க!…

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாறும்.

தலை முடி உதிர்வா? அப்ப இதை செய்யுங்க

வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான்.

இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

kattalai1

தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.

எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

4 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும்.

இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

Related posts

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

nathan

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை

nathan

பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

தலை முழுவதும் பொடுகா? நீங்கள் செய்ய வேண்டியது இப்படித்தான்!!

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும்.தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan